நீட் தேர்வு முடிவு.. கடந்த ஆண்டை விட தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு.. ஆனால் ஒரு குட் நியூஸ்!
டெல்லி: நீட் தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், இதில் ராஜஸ்தான் மாநில பெண் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஜூலை 17ம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 17 லட்சத்து 78 ஆயிரத்து 025 பேர் எழுதினர்.

நீட் தேர்வு முடிவு வெளியீடு
மொத்தம் 497 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல்12 மணிக்கு வெளியானது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சர்வர் பிரச்சினை காரணமாக நீட் தேர்வு முடிவுகள் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாணவி முதலிடம்
இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு வெளியான இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்க முடியாமல் மாணவர்கள் திணறினர். இந்த நிலையில், இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி தனிஷ்கா 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த மாணவர் வத்சா ஆஷிஷ் பத்ரா 2ம் இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் குறைவு
அதேபோல் உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நடப்பு ஆண்டு 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 மாணவ மாணவிகள் தேர்வை எழுதினர். இதில் 67, 787 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதம் குறைவு
இதன் தேர்ச்சி விகிதம் 51.288 % ஆகும். கடந்த ஆண்டு 1 லட்சத்து 08 ஆயிரத்து 318 பேர் தேர்வு எழுதினர். இதில் 58,922 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதன் தேர்ச்சி விகிதம் 54 % ஆகும். நடப்பு ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் நடப்பு ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது கல்வியாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
நீட், சிபிஎஸ்இ குளறுபடிகள்! நாங்கள் நடத்துவது அமைதி போராட்டம்தான்! கரப்பான் பூச்சி கட்சி விளக்கம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications