இனி ஈசி ஊசி.. நரம்பை கண்டறிய வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்.. "அப்பாடா.. இனி கை பஞ்சர் ஆகாது"
டெல்லி: உடலில் நரம்புகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி நோயாளிகள் மட்டுமல்லாமல் அனைவரையுமே நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது.
இதனால் நரம்புகளை தேடி தேடி தேவையில்லாமல் ஊசியால் குத்தப்படும் துன்பம் முடிவுக்கு வந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத்தில் பல புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருந்தாலும், இதுபோன்ற அடிப்படை விஷயங்களுக்கான கண்டுபிடிப்புகளும் அதிக அளவில் வர வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவத்துறையின் அசுர வளர்ச்சி
மருத்துவத்துறையில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்பது சாதாரணமானது அல்ல. ஒருகாலத்தில், கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் எல்லாமல் இன்று மருத்துவத்துறையில் சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆபத்தான அறுவை சிகிச்சைகள் என சொல்லப்பட்டதெல்லாம், இன்று ஒருசில மணிநேரங்களில் எளிதாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்கப்படுகின்றன. இவை அனைத்துக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிதான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ரணம் நிறைந்த நரம்பு ஊசி..
அதே சமயத்தில், நோயாளிகள் அன்றாடம் சந்திக்கும் சில அடிப்படையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொழில்நுட்பங்கள் இன்னும் வரவில்லை. குறிப்பாக, நரம்பு ஊசி செலுத்துவதும், குளுக்கோஸ் ஏற்றுவதும் சாதாரணமான நடைமுறைதான். ஆனால், பெரும்பாலானோருக்கு கைகளில் நரம்புகள் எளிதில் தென்பட்டு விடாது. இதனால் மருத்துவர்களும், செவிலியர்களும் கைகளில் தொடர்ந்து ஓங்கி அடிப்பதை பார்த்திருப்போம். அப்படியும் நரம்புகள் கிடைக்கவில்லை என்றால், தோராயமாக பல இடங்களில் ஊசியால் குத்தி குத்தி அதன் பிறகு நரம்பில் ஊசி செலுத்தப்படும். இதனால் நோயாளிகள் படும் அவதி கொஞ்சம் நஞ்சமல்ல.

அசத்தல் கண்டுபிடிப்பு
ஆனால், இனி இந்த அவஸ்தை தேவையில்லை. உடலில் நரம்புகளை எளிதில் கண்டறியும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, ஒருவருக்கு நரம்பு ஊசி செலுத்த வேண்டும் என்றால் அவரது கையில் ஒரு பிரத்யேக பச்சை நிற ஒளி பாய்ச்சப்படும். அடுத்த நொடியே, அவரது கையில் உள்ள நரம்புகள் மட்டும் தனித்தனியாக தெரியும். பின்னர் ஏதேனும் ஒரு நரம்பில் ஊசி செலுத்தினால் போதும்.

இந்தியாவிலும் வந்துவிட்டது..
இது சாதாரணமானதாக தெரிந்தாலும், மிகவும் தேவையான அத்தியாவசியமான கண்டுபிடிப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே நோய் தாக்கத்தால் மனதளவில் நொறுங்கி போயிருக்கும் நோயாளிகளை, உடலளவிலும் ரணப்படுத்தும் செயலாக இந்த நரம்பு ஊசி செலுத்தும் நடைமுறை இருந்தது. தற்போது இதிலிருந்து நோயாளிகளுக்கு விடுதலை கிடைக்கப் போகிறது. இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் வந்துவிட்டதாகவும், படிப்படியாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் கொண்டு வரப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications