29 நாடுகளுக்கு பரவிய..புதிய லாம்ப்டா உருமாறிய கொரோனா..இனி வேக்சின் வேலை செய்யுமா.. WHO கூறுவது என்ன
டெல்லி: பெரு நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு லாம்ப்டா என பெயரிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, அது கவனிக்கப்பட வேண்டிய உருமாறிய கொரோனா என்றும் அது 29 நாடுகளுக்குப் பரவியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. பல நாடுகளிலும் கொரோனா குறைவது போலத் தோன்றினாலும், கொஞ்ச கால இடைவெளியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறது.
உருமாறிய கொரோனா வகைகளே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்படும் உருமாறிய கொரோனா வகைகள், வைரஸ் பரவலையும் பாதிப்பையும் தீவிரப்படுத்துகின்றன.

புதிய உருமாறிய கொரோனா
இந்த நிலையில் தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட குறைந்தபட்சம் 29 நாடுகளுக்குப் பரவியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், இந்த உருமாறிய கொரோனா வைரசை உலக சுகாதார அமைப்பு கவனிக்கப்பட வேண்டிய கொரோனா வகை என்றும் பட்டியலிட்டுள்ளது.

லாம்ப்டா வகை கொரோனா
உருமாறிய கொரோனா வைரசஸ்களுக்கு உலக சுகாதார அமைப்பு பெயர்களை வழங்கி வரும் நிலையில், பெரு நாட்டில் கண்டறியப்பட்ட இந்த வைரசுக்கு லாம்ப்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது. லாம்ப்டா வகை கொரோனா முதலில் ஆகஸ்ட் 2020இல் கண்டறியப்பட்டதாகவும், தற்போது பெரு நாட்டில் உறுதி செய்யப்படும் வழக்குகளில் 81% லாம்ப்டா கொரோனா வகைகளாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 60 நாட்களில் சிலி நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகளில் 32% லாம்ப்டா வகையாகவே இருந்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகள்
லாம்ப்டா உருமாறிய கொரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த லாம்ப்டா கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தென் அமெரிக்கா நாடுகளில் தற்போது இந்த உருமாறிய கொரோனா வேகமாகப் பரவி வருவதாகவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

தடுப்பூசிகளிலிருந்து தப்புமா
கொரோனா பாதிப்பை அதிகரிக்கத் தேவையான மரபணு மாற்றத்தை லாம்படா வகை கொரோனா கொண்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது கொரோனா தடுப்பூசிகளிடம் இருந்து தப்புமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய லாம்படா வகை எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துமா, இதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்துக் கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications