பல கோடி.. பக்கத்திலேயே வர முடியாது.. மோடிக்காக இறக்கப்பட்ட மெர்சிடிஸ் Maybach- என்ன சிறப்பு தெரியுமா
டெல்லி: பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக அவர் பயன்படுத்தும் வகையில் மெர்சிடிஸ் வகை கார்களில் ஒன்றான Mercedes-Maybach S650 கார் வாங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் தற்போது கார் பிரியர்கள் இடையே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடியின் கான்வாயில் அவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இதுவரை ரேஞ்ச் ரோவர் வோக் மற்றும் டொயோட்டா லேந்து க்ரூசர் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த வாகனங்கள் தற்போது அப்கிரேட் செய்யப்பட்டு புதிதாக Mercedes-Maybach S650 கார் களமிறக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி ஹைதராபாத் ஹவுஸுக்கு வந்து இருந்தார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பிற்கு மோடி Mercedes-Maybach S650 காரில் வந்து இருந்தார்.

மோடி கார்
Mercedes-Maybach S650 கார் என்பது VR10 பாதுகாப்பு கொண்ட கார் ஆகும். உலகிலேயே ஒரு காருக்கு கொடுக்கப்பட கூடிய அதிகபட்ச பாதுகாப்பு சர்டிபிகேட் இதுதான். அந்த அளவிற்கு பக்கத்திலேயே நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு கொண்டது இந்த கார். இந்தியாவில் இதன் விலை 12 கோடி ரூபாய் வரை இருக்கும்.

பிரதமர் மோடி புதிய கார்
பொதுவாக பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு தரும் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்பிஜி பிரிவுதான் புதிய கார் ஒன்றை பிரதமருக்கு வாங்க வேண்டும் என்றால் அதற்கான முடிவை எடுக்கும். இதற்கான பல்வேறு பாதுகாப்பு சோதனைகளை எஸ்பிஜி செய்யும். பல்வேறு கார்களை சோதனை செய்து கடைசியில் ஒரு காரை எஸ்பிஜி இறுதி செய்யும்.

மெர்சிடிஸ் கார்
இந்த நிலையில்தான் முதல்முறையாக பிரதமர் கான்வாய்க்கு Mercedes-Maybach S650 வாங்கப்பட்டுள்ளது. இது 6 லிஸ்ட்டர் கொண்ட இரட்டை டர்போ V12 எஞ்சின் கொண்ட கார் ஆகும். இதன் குதிரை திறன் 516bhp ஆகும். அதேபோல் அதிகபட்சம் இது 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

மோடி மெர்சிடிஸ்
இதில் இருக்கும் S650 கார்ட் பாடி காரணமாக இரும்பு தோட்டாக்கள் வந்து தாக்கினால் கூட காருக்கு எதுவும் ஆகாது. அதேபோல் 2010 Explosion Proof Vehicle (ERV) சான்று இதற்கு உள்ளது. வெறும் 2 மீட்டர் தூரத்தில் 15 கிலோ டிஎன்டி பாம் வெடித்தால் கூட கார் அப்படியே நிற்கும். அந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் உட்பக்கம்
polycarbonate மூலம் ஆனது.

மெர்சிடிஸ் சிறப்பு
இதனால் நேரடியாக காருக்கு உள்ளேயே குண்டு வெடித்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. வாயு தாக்குதல் நடந்தாலும் கூட உடனே உட்பக்கம் காற்று வெளியேற்றப்பட்டு ஆக்சிஜன் வழங்கும் திறனும் உள்ளது. இதன் டீசல் டேங்க் சிறப்பு பொருள் ஒன்றால் ஆனது. இதில் தாக்குதல் நடைபெற்று துளை ஏற்பட்டாலும் உடனே தானாக துளை மூடிக்கொள்ளும்.

மோடி கார் சிறப்பம்சம்
போயிங் நிறுவனம் AH-64 Apache tank attack ஹெலிகாப்டர் உருவாக்க பயன்படுத்திய அதே மெட்டீரியல்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எந்த தாக்குதலையும் இது தாங்கும். இதன் டயர்கள் பஞ்சர் ஆகவே ஆகாது. இத்தனை பாதுகாப்புகள் இருந்தாலும் இதன் உட்பக்கம் அப்படியே தேர் போல அலங்காரத்தோடு மிக சிறப்பாக இருக்கும். இதைத்தான் பிரதமர் மோடிக்காக எஸ்பிஜி தற்போது களமிறக்கி உள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications