அரபிக் கடலில் சீனாவுக்கு எதிராக வியூகம்: ஓமன் பாதுகாப்பு செயலாளர் 6 நாட்கள் பயணமாக இந்தியா வருகை!
டெல்லி: ஓமன் நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் முகமது நசீர் அல் ஜாப்பி (Mohammed Nasser Al Zaabi) 6 நாட்கள் பயணமாக இன்று டெல்லி வருகை தருகிறார். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த டுக்ம் (Duqm) துறைமுகத்தை ராணுவ பயன்பாட்டுக்கு இந்தியா பயன்படுத்திக் கொள்ள ஓமன் அனுமதி அளித்த நிலையில் டெல்லி வரும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் முகமது நசீர் அல் ஜாப்பிக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கிறது மத்திய அரசு.
Recommended Video
இந்திய பெருங்கடல், அரபிக் கடல், ஓமன் வளைகுடா ஆகியவற்றில் ராணுவம் மற்றும் வர்த்தகம்சார் நடவடிக்கைகளின் பாதுகாப்புக்காக சீனா பல நாடுகளுடன் கை கோர்த்துள்ளது. பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகம், இலங்கையின் கொழும்பு துறைமுகம் உள்ளிட்டவைகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் சீனா நிலை கொண்டுள்ளது.

ஓமன் துறைமுகத்தில் இந்தியா
இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய அரசும் செயல்பட்டு வருகிறது. இலங்கையின் திருகோணமலை துறைமுகம், ஈரானின் சபஹார் துறைமுகம் ஆகியவற்றில் இந்தியா ஏற்கனவே நிலை கொண்டுள்ளது. 2018-ம் ஆண்டு முதல் டுக்ம் (Duqm) துறைமுகத்தை ராணுவம் சார் நடவடிக்கைகளுக்கு இந்தியா பயன்படுத்திக் கொள்ள ஓமன் அனுமதி வழங்கியது. 2018-ல் பிரதமர் மோடி ஓமன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ராணுவ ஒத்துழைப்பு, சுற்றுலா, சுகாதாரம், கல்வி உட்பட 8 துறைகளில் இந்தியா- ஓமன் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் மூலமாக டுக்ம் (Duqm) துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள இந்தியா அனுமதி பெற்றது.

இந்தியா-ஓமன் 2021 ஒப்பந்தம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வணிக கப்பல் போக்குவரத்து தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஓமன் கடற்படை கமாண்டர் ரியர் அட்மிரல் சைப் பின் நசர் மொஹ்சன் அல்-ராபி, இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்திய கடற்பை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் அரசு முறைப் பயணமாக ஓமன் சென்றிருந்தார். அப்போது இரு நாட்டு கடற்படைகள் இடையே, வணிக கப்பல் போக்குவரத்து தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம், மஸ்கட்டில் உள்ள கடல்சார் பாதுகாப்பு மையத்தில் கையெழுத்தாகின. இதன் மூலம் இரு நாட்டு வணிக கப்பல்கள் போக்குவரத்தில் கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டன.

6 நாட்கள் பயணமாக இந்தியா வருகை
இந்நிலையில் ஓமன் நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் முகமது நசீர் அல் ஜாப்பி இன்று டெல்லி வருகை தருகிறார். இன்று முதல் பிப்ரவரி 4-ந் தேதி வரை இந்தியாவில் ஓமன் நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் முகமது நசீர் அல் ஜாப்பி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கிறது மத்திய அரசு. இப்பயணத்தின் போது இருநாடுகளிடையேயான கூட்டு ராணுவ ஒத்துழைப்பு கமிட்டியின் 10-வது ஆலோசனைக் கூட்டத்திலும் முகமது நசீர் அல் ஜாப்பி பங்கேற்கிறார். 2018-ம் ஆண்டு கடைசியாக இருநாடுகளின் கூட்டு ராணுவ ஒத்துழைப்பு கமிட்டியின் 9-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது டெல்லியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் முகமது நசீர் அல் ஜாப்பி சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு துறை விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

ஓமனுடன் கூட்டு பயிற்சி
முகமது நசீர் அல் ஜாப்பியின் பயணத்தைத் தொடர்ந்து ஓமனின் விமானப் படை மற்றும் கடற்படை தளபதிகளும் பிப்ரவரி மாதம் இந்தியா வருகை தர உள்ளனர். ஜோத்பூரில் இருநாட்டு விமான படைகளும் கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளன. வளைகுடா நாடுகளில் ஓமன் நாட்டுடனுன் மட்டுமே ராணுவம், விமானப் படை, கடற்படை என முப்படைகளுடன் இணைந்து கூட்டு பயிற்சியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அரபிக் கடலில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து இந்திய வர்த்தக கப்பல்களைப் பாதுகாப்பதில் ஓமன் உறுதுணையாகவும் இருந்து வருகிறது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications