டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதில்.. சென்னை 4% வளர்ச்சி.. பெங்களூர் 2% வீழ்ச்சி.. வெளியான டேட்டா

Google Oneindia Tamil News

டெல்லி: உலகத்தையே உலுக்கிய கொரோனா தொற்றால் வளர்ச்சி அடைந்த நாடுகள் உள்பட பல்வேறு கடும் பொருளாதார வீழ்ச்சிகளை சந்தித்து. இந்நிலையில், உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது, இதனால் பணவீக்கம் அதிகரித்து பல்வேறு நிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதை குறைத்து வருகிறது.

மான்ஸ்டர் எம்பிளாயிமெண்ட் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடரும் பணவீக்கம் மற்றும் சர்வதேச சந்தையில் ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால், கடந்த ஆண்டு மட்டும் 6 சதவீதம் அளவிற்கு பணியாளர்களை வேலைக்கு எடுப்பது குறைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பண்டிகைக் காலம் நெருங்கினாலும், உலகளாவிய மந்தநிலை, பணவீக்கம் மற்றும் மேக்ரோ பொருளாதார தலையீடுகள் ஆகியவற்றின் அச்சங்களுக்கு மத்தியில் பணியமர்த்தல் ஒவ்வொரு மாதமும் 1% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

One percent job hiring decreasing due to inflation

இந்திய ஐடி மென்பொருள், ஹார்டுவேர், டெலிகாம் ஆகியவற்றில் 3 சதவீதம் வல்லுநர்கள் தேவை குறைவாக உள்ளனர். பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் 16 சதவீதமும், கொள்முதல் மற்றும் விநியோகத்தில் 14 சதவீதமும், மருத்துவ நிறுவனங்களில் 12 சதவீதமும் முந்தைய ஆண்டை விட மிக அதிக சரிவை பதிவு செய்துள்ளன. மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் 25சதவீதம், மந்தநிலையை பதிவு செய்தது.

பொறியியல், சிமெண்ட், கட்டுமானம், இரும்பு மற்றும் எஃகு 24 சதவீதமும், கப்பல் போக்குவரத்து/ மரைன் 21 சதவீதமும் பணியாட்கள் தேர்வு செய்வதை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உற்பத்தியில் 14 சதவீதமும், பிபிஓ மற்றும் ஐடி நிறுவனங்களில் 10 சதவீதமும், சுற்றுலா துறையில் 8 சதவீதமும் பணியமர்த்திலில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தொடர் பண்டிகை காரணமாக சில்லறை விற்பனை துறையில் 10 சதவீதம் வேலைக்கு ஆட்கள் எடுப்பது அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ரசாயனத்துறையில் அதிகபட்சமாக 32சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.

புவியியல் அடிப்படையில், ஹைதராபாத் (+8%), டெல்லி (+6%), சென்னை (+4%) ஆகிய நகரங்களில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது அதிகரித்துள்ளது, மேலும் புனே (+4%), கொச்சி (+1%) ஆகிய நகரங்களிலும் வேலைக்கு ஆட்கள் எடுப்பது அதிகமாக உள்ளது.

ஜெய்ப்பூர் (-1%), பரோடா (-2%), பெங்களூர் (-2%) ஓரளவு சரிவை பதிவு செய்துள்ளன. கொல்கத்தா நகரம் இருப்பதிலேயே மோசம். -வேலைக்கு புதிய ஆட்களை எடுக்கும் நடவடிக்கையில் 11% சரிவை பதிவு செய்துள்ளது.

சுதந்திரத்திற்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம்..? எதுக்கு இந்த வேலை? - போட்டுத் தாக்கிய ராஜா! சுதந்திரத்திற்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம்..? எதுக்கு இந்த வேலை? - போட்டுத் தாக்கிய ராஜா!

English summary
One percent job decreasing in india due to inflation fear but Chennai hiring more people than Bangalore: தொடரும் பணவீக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதை குறைத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X