ஆதாருடன் இணைக்கவில்லையா? பான் கார்ட் ஏப்.1 முதல் செயல்படாது.. வருமான வரித்துறை அதிரடி உத்தரவு
டெல்லி: ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படாது என வருமான வரித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
இதனால் ஆதார் எண்ணுடன் பான் அட்டைகளை உடனடியாக இணைக்குமாறு வருமான வரித்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் பொதுமக்கள் தீவிர காட்டி வருகின்றனர்.
தனி நபர் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகள், அசையா சொத்துகளை விற்பனை செய்தல், வங்கிக் கணக்கு தொடங்குதல் என அனைத்துக்கும் பான் அட்டை இன்றியமையாததாக மாறிவிட்டது. ரூ.10 ஆயிரத்துக்கு மேலான பரிவர்த்தனைகளை பான் அட்டை இல்லாமல் செய்ய முடியாது. எனவே நாட்டில் பெரும்பாலான மக்களிடம் பான் அட்டை இருக்கிறது.

பான் அட்டையின் பயன்பாடு ஒருபுறம் இருக்க, இதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தனி நபர் பிரத்யேக அடையாள எண்ணான ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை பல ஆண்டுகளாகவே கூறி வருகிறது. அப்படி இணைக்கப்பட்டால், போலி பான் அட்டைகளின் பயன்பாடு ஒழிந்துவிடும் என்றும், வரி ஏய்ப்பு நடைபெறாது எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க பல அவகாசங்களும் வழங்கப்பட்டுவிட்டன. இருந்தபோதிலும், பலர் இன்னும் இவற்றை இணைக்காமல் உள்ளனர்.
இந்நிலையில்தான், வருமான வரித்துறை தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "வருமான வரித்துறை சட்டம் 1961-இன் படி வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான் அட்டையை வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால், ஏப்ரல் 1-ம் தேதியுடன் அவர்களின் பான் எண் செயல்படாது. கடைசி நேரம் நெருங்குகிறது. இன்றே மேற்குறிப்பிட்ட இரண்டையும் இணைத்துவிடுங்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாதவர்கள், அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்களில் வசிப்பவர்கள், கடந்த ஆண்டில் 80 வயதை எட்டியவர்கள் ஆகியோருக்கு இந்த நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க www.incometax.gov.in என்ற இணையப் பக்கத்தில் சென்று ரூ.1000 கட்டணமாக செலுத்தி பின்னர் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications