இ வித்யா: டிஜிட்டல் பல்கலைக்கழகம்... நாடு முழுவதும் 200 டிவி சேனல்கள் - நிர்மலா சீதாராமன்
கல்விக்காக 200 டிவி சேனல்கள் தொடங்கப்படும் என்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: மாணவர்களின் கல்விக்காக நாடு முழுவதும் 200 கல்வித் தொலைக்காட்சிகள் தொடங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமரின் இ வித்யா திட்டத்தின் கீழ் ஒரே வகுப்பு, ஒரு டிவி சேனல் நிகழ்ச்சி விரிவுபடுத்தப்படுவதாகவும் கூறினார்.
2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காகிதம் இல்லா டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பள்ளி கல்விக்காக பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை, மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவது ஊக்குவிக்கப்படும் எனவும் மின்னணு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே கொரோனா பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் ஆன்லைன் மூலமாகவும் கல்வித்தொலைக்காட்சி மூலமாகவும் மாணவர்கள் பாடம் படித்து வருகின்றனர். பள்ளிக் கல்விக்காக ஏற்கெனவே 3 தொலைக்காட்சி அலைவரிசைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு மேலும்12 அலைவரிசைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டி.வி. சேனல், உருவாக்கப்படும் என்று கடந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களுக்காக தனியார் டி.டி.எச் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் உரையில் பிரதமரின் இ வித்யா திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரே வகுப்பு ஒரு தொலைக்காட்சி திட்டத்தின் கீழ் 200 புதிய கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் என்றும் தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications