டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாட்டிலுக்கு 70% வரிதானே-அரசாங்கத்துக்கு நன்கொடைன்னு நினைச்சுப்போம்- ஒரிஜனல் குடிமகனின் செம விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: மதுபானங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதைப்பற்றி கவலைப்படாதவர்களாக சாலைகளில் கொளுத்தும் வெயிலில் சரக்கு பாட்டில்களுக்காக தவம் கிடக்கின்றனர் குடிமகன்கள்.

கொரோனாவுக்காக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன், மதுபான கடைகளை மூட வைத்தது. இன்னமும் கொரோனாவின் பாதிப்பு ஓயவில்லை. மாறாக உச்சமாகத்தான் அதிகரித்து கொண்டே போகிறது.

Pople not worry over 70% tax on liquor in Delhi

ஆனாலும் கட்டுப்பாடுகள் தளர்வு என்ற பெயரில் பெரும்பாலான மாநிலங்களில் மதுபான கடைகள் திறந்துவிடப்பட்டுவிட்டன. இதனால் குடிமகன்கள் பெரும் கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில அரசுகள் நேற்று மாலைதான் மதுபான கடைகளைத் திறக்க முடிவு செய்தன. தமிழக அரசும் நேற்று இரவுதான் மதுபான கடைகளை திறக்கலாம் என முடிவெடுத்தது. ஆனால் இன்று சென்னையில் மட்டும் மதுகடைகளை திறக்கப் போவது இல்லை என அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

இதனிடையே டெல்லி மற்றும் ஆந்திராவில் மதுபான விலைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு எல்லாம் எங்களை பாதிக்காது என்கிற தொனியில் இன்றும் நீண்ட் வரிசையில் குடிமகன்கள் காத்திருந்தனர்.

இப்படி நீண்ட வரிசையில் காத்திருந்த டெல்லி குடிமகன் ஒருவர் கூறுகையில், நான் காலை 6 மணி முதல் வரிசையில் காத்திருக்கிறேன். காலையில் 9 மணிக்கு கடை திறந்துவிடுவார்கள். ஆனால் 8.55 மணிக்கே போலீஸ் வந்து நிலைமை மோசமாகிவிட்டால் என்ன செய்வது? அதனால் முன்கூட்டியே வந்துவிட்டேன்.

டெல்லி அரசு 70% வரி விதித்திருப்பதாக கூறியிருக்கிறது. அதை பற்றி எந்த கவலையும் இல்லை. அரசுக்கு நாங்கள் நன்கொடை கொடுப்பதாக நினைத்து கொள்கிறோம் என்கிறார் அசால்ட்டாக.

English summary
A man outside a liquor shop in Laxmi Nagar, Delhi said that I am here since 6 am. Shop was supposed to open at 9 am but police arrived at 8:55 am...who will be responsible if something untoward happens here? We've no issue with 70% tax, it's like a donation from us to country".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X