"உடலுறவு" மூலம் பரவும் மங்கி பாக்ஸ்! ஆணுறை யூஸ் பண்ணுங்க.. எச்சரிக்கும் மருத்துவ வல்லுநர்
டெல்லி: மங்கி பாக்ஸ் குறித்த அச்சம் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய எச்சரிக்கை ஒன்றைச் சுகாதார வல்லுநர் கொடுத்துள்ளார்.
கொரோனா முடிந்துள்ள நிலையில், அடுத்து மங்கி பாக்ஸ் பாதிப்பு வேகமாகப் பரவ தொடங்கி உள்ளது. உலகின் பல நாடுகளில் சில ஆயிரம் பேருக்கு இந்த மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டு உள்ளது.
ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு இதை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துவிட்டது. அதேபோல அமெரிக்காவும் கேஸ்கள் அதிகரிப்பதால் இதைச் சுகாதார அவசர நிலையாக அறிவித்து உள்ளது.

மங்கி பாக்ஸ்
இதனிடையே ஆண்களுடன் உறவு கொள்ளும் ஆண்களுக்கே மங்கி பாக்ஸ் ரிஸ்க் அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம் யாருக்கு வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. பாலியல் ரீதியான தொடர்புகள் மூலம் வைரஸ் பரவலாம் என அஞ்சப்பட்டது. எனவே, நிறைய பாட்னர்களை வைத்து இருக்கும் நபர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

தவிர்க்க வேண்டும்
மங்கி பாக்ஸ் நோயாளிகளின் புண்கள், உடல் திரவங்கள், சுவாசத் துளிகள் மூலமே அது மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளதாக மூத்த நுரையீரல் டாக்டர் அவி குமார் தெரிவித்துள்ளார். மங்கி பாக்ஸ் நோயாளி உடன் நேரடி தொடர்பு, அவர்களுடன் உடலுறவு கொள்வது, நோயுற்ற விலங்குகள் அருகில் இருப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், மங்கி பாக்ஸ் நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை முறையாகச் சுத்தம் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடலுறவு
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அடிக்கடி சோப்பு நீரில் கைகளைக் கழுவ வேண்டும். நோயாளிகளை மருத்துவமனையில் முறையாகத் தனிமைப்படுத்த வேண்டும். மேலும், உடலுறவு வைத்துக் கொள்ளும்போது பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். ஆணுறைகள் அணிவது முக்கியம் ஏனென்றால், மங்கி பாக்ஸ் நோயாளிகள் உடன் பாலியல் உறவுகள் மூலமும் இது பரவும் ஆபத்து உள்ளது" என்றார்.

நெருங்கிய தொடர்பு
இது இரு வகைகளில் மற்றவர்களுக்குப் பரவும். முதலில் மங்கி பாக்ஸ் பாதித்த விலங்குகள் கடிப்பது, கீறுவது மூலம் பரவும். அடுத்து மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதர்களுக்குப் பரவலாம். ஆனால், இது கோவிட்-19 போல வேகமாகப் பரவாது. நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே பரவும் என்பதால் அச்சம் தேவையில்லை. இந்தியாவில் இதுவரை 9 பேருக்கு மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படிப் பரவும்
மங்கி பாக்ஸ் வைரசுக்கு அதிக காய்ச்சல், நிணநீர் சுரப்பிகள், கொப்புளங்கள் போன்றவை தான் ஆரம்ப அறிகுறிகளாகும். கடந்த சில மாதங்களில் மட்டும் பல ஆயிரம் பேருக்கு இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள போதிலும், 10க்கும் குறைவான நபர்களே இதனால் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் பாதித்த நபரிடம் இருந்து வெளிவரும் நீர் மூலமே இது மற்றவர்களுக்குப் பரவும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications