டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடினமான முடிவுகள் எடுக்க வேண்டி வரும்... ட்விஸ்ட் வைக்கும் ராகுல் டிராவிட்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய அணி நிர்வாகம் சில நேரங்களில் கடினமான தேர்வு முடிவுகளை எடுக்கலாம் எனவும் அவ்வாறு முடிவுகள் எடுக்கும் போது வீரர்களுடன் தெளிவான தொடர்பு இருக்க வேண்டியது அவசியம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்..

2017ம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வெற்றியுடன் பணியை தொடங்கிய ராகுல் டிராவிட், 2023 ஒருநாள் உலக கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார். அவர் விரும்பினால், அதன் பின்னரும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை

நியூசிலாந்து தொடரில் தொடக்க அதிரடி ஆட்டக்காரரான ரோகித்சர்மாவுக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் , முதல் ஆட்டத்தில் கிங் கோலி ஆடவில்லை. ரவிசாஸ்திரியிடம் இருந்து அணியின் கட்டுப்பாட்டை ராகுல்டிராவிட் கைப்பற்றிய பிறகு மாய்ங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் அய்யரை அணியில் கொண்டு வந்தார். இருவரும் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்தனர்.

 மூத்த வீரர்களுக்கு நெருக்கடி

மூத்த வீரர்களுக்கு நெருக்கடி

கடந்த சில தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ள அஜிங்ய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கான எதிரான தொடரில் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ளக்கடுமையான அழுத்தத்தை சந்தித்து வரும் சூழலில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது,

 தேர்வு குறித்து கடினமான

தேர்வு குறித்து கடினமான

அதாவது இந்திய அணி நிர்வாகம் சில நேரங்களில் கடினமான தேர்வு முடிவுகளை எடுக்கலாம் எனவும் அவ்வாறு முடிவுகள் எடுக்கும் போது வீரர்களுடன் தெளிவான தொடர்பு இருக்க வேண்டியது அவசியம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்..நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒருவருக்கொருவர் போட்டி போட்டிக் கொண்டு விளையாடுவதை பார்க்கும்போது தேர்வு முடிவு ஒரு இனிமையான தலைவலியாக இருக்குமென்றும், எங்களுக்கு அதிக தலைவலி இருப்பதாக நான் நம்புகிறேன், நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும், ஆனால் எங்களிடம் தெளிவான தகவல்தொடர்பு இருக்கும் வரை அதை ஒரு பிரச்சனையாக பார்க்க வேண்டாம் என்று அவர் கூறினார்.

 கலக்கும் இளம்வீரர்கள்

கலக்கும் இளம்வீரர்கள்

இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் பந்து மற்றும் பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்துள்ளார். முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார் அவர் இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியா நியூசிலாந்திற்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க உதவினார் எனக் கூறிய ட்ராவிட், ஜெயந்த் யாதவ் இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கள் உட்பட ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதையும் குறிப்பிட்டார்.

Recommended Video

    India vs NZ 2nd Test: Kohlis men beat Kiwis by 372 runs, win series 1-0 | OneIndia Tamil
     பாலோ-ஆன் கொடுக்காதது ஏன்?

    பாலோ-ஆன் கொடுக்காதது ஏன்?

    ஆடுகளம் உள்ளிட்ட விஷயங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததால் வெற்றி பெற்றுள்ளாதாகக் கூறுவது தவறு எனக் குறிப்பிட்ட ராகுல் டிராவிட், கான்பூர் டெஸ்டில் கடைசி வரை போராடி வெற்றிபெறாமல் போனதை குறிப்பிட்டார். அதிக வாய்ப்புகள் கிடைக்காத மயங்க், ஸ்ரேயாஸ், சிராஜ். அக்சர், உள்ளிட்டோர் சிறப்பக செயல்பட்டது மகிழ்சியாக உள்ளதாகவும், நிறைய நேரம் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணிக்கு பாலோ-ஆன் கொடுக்கவில்லை எனவும் , எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளில் அதனை கையாள்வதற்கு இதுபோன்ற முடிவுகள் முன்னுதாரணமாக இருக்கும் எனவும் ராகுல்டிராவிட் கூறியுள்ளார்.

    English summary
    Rahul Dravid, the head coach of the Indian team, said that the Indian team management can sometimes make difficult selection decisions and it is important to have clear communication with the players when making such decisions
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X