அச்சமில்லாதவர், புத்திசாலி.. மன்மோகன் சிங் பிறந்த நாளில் ராகுல் காந்தி போட்ட வாழ்த்து ட்வீட்
டெல்லி : மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மன்மோகன் அச்சமில்லாதவர். நாடு சந்தித்துவரும் பிரச்சினைகளை புத்திசாலித்தனத்துடன் நன்கு புரிந்து கொண்டு செயல்படுபவர். அவரிடம் இருந்து அதிகமாக கற்க வேண்டும். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். காங்கிரஸ் மூத்த தலைவரா மன்மோகன் சிங் இன்று தனது 89-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மூத்த தலைவர்கள் சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித் உள்பட பலர் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் "தொலைநோக்குள்ளவர், அர்ப்பணிப்புள்ள தேசியவாதி, பேச்சாளர் டாக்டர் மன்மோகன் சிங், இந்தியாவின் தலைவராவதற்கு நீங்கள் தகுதியானவர். உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
காங்கிரஸ் கட்சியும், ஒட்டுமொத்த தேசமும் உங்களையும், உங்கள் பங்களிப்பையும் இன்றும், நாள்தோறும் வாழ்த்தும். அனைத்தும் செய்தமைக்கு உங்களுக்கு நன்றி" என கூறியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் "பிறந்தநாள் வாழ்த்துகள் மன்மோகன் சிங் ஜி. மன்மோகன் அச்சமில்லாதவர். நாடு சந்தித்துவரும் பிரச்சினைகளை புத்திசாலித்தனத்துடன் நன்கு புரிந்து கொண்டு செயல்படுபவர். அவரிடம் இருந்து அதிகமாக கற்க வேண்டும். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications