நண்பர்களுக்காக மோடி நட்சத்திரத்தையே உடைப்பார்.. ஆனால் மக்களை ஏங்க விடுவார்.. ராகுல் காந்தி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர்களின் வளர்ச்சிக்காக நட்சத்திரத்தை கூட உடைப்பார். ஆனால் மக்களை ஒரு ரூபாய்க்கு ஏங்க விடுவார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கடந்த 18ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. விலைவாசி உயர்வு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளை பற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

 விளம்பர செலவு

விளம்பர செலவு

இந்த நிலையில் ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், கடந்த 2019-2022 ஜூன் வரையிலான நிதி ஆண்டில் ,செய்திதாள், தொலைக்காட்சி, மற்றும் இணையதளம் வாயிலாக மத்திய அரசு இதுவரை ரூ. 911.17 கோடி விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ராகுல் கேள்வி

ராகுல் கேள்வி

இது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு எதிர்க்கட்சிகள் விளம்பர செலவு பற்றி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் லோக் சபா உறுப்பினர் ராகுல் காந்தி, பாஜகவின் விளம்பரச் செலவு ரூ.911 கோடி, பிரதமர் நரேந்திர மோடிக்கு புது விமானம் வாங்குவதற்காக ரூ.8,400 கோடி, பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு வரி விலக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 45,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் உள்ள முதியவர்களுக்கு ரயில் பயணத்தில் சலுகை வழங்க ரூ.1,500 கோடி அரசிடம் இல்லை என்று கூறியுள்ளார்.

மக்களை ஏங்கவிடுவார்

மக்களை ஏங்கவிடுவார்

அதுமட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர்களின் வளர்ச்சிக்காக நட்சத்திரத்தை கூட உடைப்பார். ஆனால் மக்களை ஒரு ரூபாய்க்கு ஏங்க விடுவார் என கடுமையாக விமர்சித்துள்ளார். இதோடு மதுரை லோக் சபா உறுப்பினர் சு.வெங்கடேசன், மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தின் போது வழங்கிய சலுகையை ரத்து செய்ததால் மத்திய அரசுக்கு எவ்வளவு கோடிகள் மிச்சமாகியது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு, கணக்குத்தர முடியவில்லை என்று பதிலளித்தது.

சு.வெ. ட்வீட்

சு.வெ. ட்வீட்

இதுகுறித்து பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன், மூத்த குடிமக்களுக்கு சலுகையை தந்ததால் ரூ.1,667 கோடி இழப்பு என்று சொன்ன மத்திய அரசு, இப்பொழுது சலுகை பறிக்கப்பட்டதன் மூலம் அடைந்த மிச்சம் என்ன என்பதற்கு கணக்குத்தர முடியவில்லை என்கிறது. இது தான் டிஜிட்டல் இந்தியாவா? 6 கோடி மூத்த குடிமக்களின் சலுகையை மறுக்கும் கருணையற்ற முடிவை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+