டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றார்

நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது தலைமையின் கீழ் 2024 லோக்சபா தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திராவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை அடுந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். 62 வயதாகும் ராஜீவ் குமார், 1984ஆம் ஆண்டின் ஜார்க்கண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். மத்திய அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Rajiv Kumar take charge as Chief Election Commissioner of India

2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசின் நிதித் துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு வாரியத் தலை வராக நியமிக்கப்பட்டார். 2020 ஆகஸ்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இப்போது மூத்த தேர்தல் ஆணையர் என்பதால் பணி மூப்பு அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது தலைமையின் கீழ் 2024 லோக்சபா தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Election Commissioner: (இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்) Rajiv Kumar took over as the 25th Chief Election Commissioner of India today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X