எந்த நாட்டையும் ஆக்கிரமித்ததில்லை..இயேசு பிறப்புக்கு முன் இந்தியாவில் அறுவை சிகிச்சை - ராஜ்நாத் சிங்
டெல்லி : வரலாற்றில் இதுவரை வேறு எந்த நாட்டையும் தாக்குதலுக்கு உட்படுத்தி அந்த நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்காத உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத்தினர் மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நாடுகளை வகிப்பதாகவும், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு புறக்கணித்தது. இதனால் இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் உலக அரசியல் நோக்கர்கள் கூற்கின்றனர்.

உக்ரைன் போர்
அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் பேசியதாகவும் ரஷ்யாவுக்கு போரை நிறுத்த கடும் அழுத்தங்களை இந்தியா தர வேண்டும் என வலியுறுத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில் போலந்து சுவீடன் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளன. இருந்தும் அங்கு போர் முடியவடையவில்லை.

ஆக்கிரமிக்காத ஒரே நாடு
இந்நிலையில் வரலாற்றில் இதுவரை வேறு எந்த நாட்டையும் தாக்குதலுக்கு உட்படுத்தி அந்த நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்காத உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லி பல்கலைக் கழகத்தின் 98ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியா அறிவியல் துறையில் முன்னணி நாடாக விளங்கியது எனவும் , ஆனால் பல நூற்றாண்டு கால அடிமைத்தனத்தின் காரணமாக இது பல பேருக்குத் தெரியவில்லை என்றார். பூஜ்ஜியம் என்ற ஒரு கருத்துருவாக்கத்தை இந்தியாதான் உருவாக்கியது எனவும், பிதாகரஸ் தேற்றத்தை பித்தாகரஸ் கூறுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே போதாயானா கூறினார் என கூறிய ராஜ்நாத் சிங், இயேசு பிறப்பதற்கு முன்பே நம் நாட்டில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

உலகின் ஒரே நாடு
அறிவு மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா கடந்த காலத்தில் உலகத்தின் தலைவராக இருந்ததை உலகம் நம்புகிறது எனவும், ஆனால் முற்போக்கு வாதிகள் என தங்களை அழைப்பவர்கள் நாட்டின் கலாச்சார சிறப்பு குறித்து அவதூறாக பேசி கேள்வி எழுப்புவதாக பேசிய ராஜ்நாத் சிங், பூமியின் வடிவத்தையும் அது ஒரே அச்சில் சுழல்வதால் கோபர்நிகஸ் கூறுவதற்கு முன்பே ஆரியபட்டா விளக்கினார் என்றார். மேலும் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்ற விரும்புவதாகவும், வேறு எந்த ஒரு நாட்டையும் தாக்கி ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே எனவும் ராஜ்நாத் சிங் பேசினார்.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications