நாட்டில் பிறந்து ஓராண்டில்.. 36 குழந்தைகளில் ஒரு குழந்தை பலி! பிறப்பு விகிதமும் குறைவதாக ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த குழந்தை இறப்பு விகிதம் குறித்து வெளியாகி உள்ள தரவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியா பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் போதிலும், சுகாதார குறியீடுகளில் குறிப்பிட்ட சில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்கள் பின்தங்கியே உள்ளது.

குறிப்பாகப் பல மாநிலங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உடனே பிறந்து வருகிறது. இதைத் தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 குழந்தை இறப்பு விகிதம்

குழந்தை இறப்பு விகிதம்

ஒரு சமூகத்தில் குழந்தைகள் எந்தளவு சத்துடன் இருக்கிறார்களோ, அது தான் அந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சுகாதார சூழலைக் காட்டுவதாக அமையும். குழந்தைகளின் ஆரோக்கியம் எந்தளவு உள்ளது என்பதைக் கண்டறிய IMR எனப்படும் குழந்தை இறப்பு விகிதம் முக்கியமானதாக உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் உயிரிழக்கின்றன என்பதாகும்.

 குறைகிறது ஆனால்..

குறைகிறது ஆனால்..

இதற்கிடையே நாட்டில் ஏற்படும் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து இந்தியப் பதிவாளர் ஜெனரல் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 1971இல் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் 129 பேர் உயிரிழந்த நிலையில், 2020இல் இது ஆயிரம் பிறப்புக்கு 28ஆக குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகவே குழந்தை இறப்புகள் என்பது சுமார் 36 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை இறப்பு என்பது 44இல் இந்து 28ஆகக் குறைந்துள்ளது.

 36 குழந்தைகளில் ஒரு குழந்தை

36 குழந்தைகளில் ஒரு குழந்தை

குறிப்பாகக் கிராமப்புறங்களில் குழந்தை இறப்பு 48இல் 31ஆகவும், நகர்ப்புறங்களில் இது 29இல் 19ஆகவும் குறைந்துள்ளது. 10 ஆண்டுகளில் குழந்தை இறப்பு விகிதம் என்பது கிராமப்புறங்களில் 35 சதவிகிதம், நகர்ப்புறங்களில் 34 சதவிகிதமும் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து வரும் போதிலும், இப்போதும் கூட ஒவ்வொரு ஆண்டும் 36 குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்த முதல் ஆண்டிற்குள் உயிரிழக்கிறது.

 குழந்தைகள்

குழந்தைகள்

2020ஆம் ஆண்டில் குழந்தை இறப்பு விகிதம் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 43ஆக உள்ளது. அதேபோல குறைந்தபட்சமாக மிசோரத்தில் 3ஆக உள்ளது. அகில இந்திய அளவில் பிறப்பு விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் குறைந்துள்ளது. 1971இல் 36.9 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2020இல் 19.5ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறங்களில் பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது.

 குழந்தை பிறப்பு விகிதம்

குழந்தை பிறப்பு விகிதம்

கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 11 சதவீதம் குறைந்துள்ளது, 2011ல் 21.8ஆக இருந்த பிறப்பு விகிதம் 2020இல் 19.5ஆகக் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் 23.3இல் இருந்து 21.1 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 17.6இல் இருந்து 16.1ஆகக் குறைந்துள்ளது. பிறப்பு விகிதம் என்பது மக்கள்தொகை வளர்ச்சியின் முக்கிய குறியீடு ஆகும். பிறப்பு விகிதம் என்பது குறிப்பிட்ட பிராந்தியத்திலும் வருடத்திலும் ஆயிரம் பேருக்கான நேரடி பிறப்புகளின் எண்ணிக்கை ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+