உக்ரைன் மீது ரஷ்யா போர்.. இந்தியாவில் விலை உயர வாய்ப்புள்ள பொருட்கள் என்ன தெரியுமா?
டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கிவிட்டதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவைகளின் விலை உயரும் அபாயம் உள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்தது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இருந்தன.
இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவ படைகளை குவித்து வந்தது. அங்கு ராணுவ பயிற்சியும் நடைபெற்றதாக தெரிகிறது. பீரங்கிகள், ஆயுதங்களை உக்ரைன் எல்லையில் குவித்ததால் ஐநா, நேட்டோ, அமெரிக்கா உள்ளிட்டவை ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தன.

பொருளாதார தடை
போர் தொடுத்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்தன. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ரஷ்யா ராணுவ படைகளை அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் உக்ரைனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

உக்ரைன் மீது ரஷ்யா போர்
இன்று காலை உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டிருந்தார். அதன் படி ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கிவ்வில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் பொருட்கள் விலை கிடுகிடு
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போரால் இந்தியாவில் சில பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. ரஷ்ய போரால் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகமாக பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியுள்ளது. கச்சா எண்ணெயின் மிகப் பெரிய உற்பத்தியாளர்களில் ரஷ்யாவும் ஒன்று.

ஜிடிபி வளர்ச்சி
கச்சா எண்ணெயின் விலை உயர்வு உலக ஜிடிபியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெட்ரோல் விலை பேரலுக்கு 150 டாலர்கள் உயர வாய்ப்புள்ளது. உலக ஜிடிபி வளர்ச்சியும் 0.9 சதவீதம் குறையும் அபாயம் இருக்கிறது. அது போல் இயற்கை வாயுக்களின் விலையும் உயரும். சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பெட்ரோல டீசல் விலை உயர்வு
கடந்த காலங்களில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இந்தியா முழுவதும் கடந்த 2021 ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது. இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களில் 25 சதவீதம் எண்ணெய் பொருட்கள் உள்ளன. 80 சதவீதத்திற்கு மேல் எண்ணெய் தேவைகளுக்காக இந்தியா பிற நாடுகளை நம்பியுள்ளது.

கோதுமை விலை உயர்வு
கருங்கடல் பகுதியிலிருந்து தானியங்கள் வரத்திலும் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உணவு பொருட்களிலும் விலையேற்றம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் உலகின் கோதுமையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னணியில் உள்ளது ரஷ்யா. அதே நேரம் உக்ரைன் கோதுமை உற்பத்தியில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதனால் உக்ரைன் மீதான போரால் இவையெல்லாம் உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். அது போல் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications