டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகமாக காற்றை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியல்.. இந்தியா பிடித்த இடம் என்ன தெரியுமா?

கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிகமாக காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம் ?

    டெல்லி: கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2017ம் ஆண்டு உலக அளவில் 7 சதவீதம் அளவுக்கு இந்தியா கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றியுள்ளது.

    கார்பன் ப்ராஜட் என்ற அமைப்பு பட்டியல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுவதில் சீனா (27 சதவீதம்) முதல் இடத்தில் உள்ளது.

    காற்று மாசு

    காற்று மாசு

    2018 ம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் கார்பன் டை அக்ஸைடு உமிழ்வு 6.3 சதவீதமாக அதிகரிக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது. எரிப்பொருட்களால் இந்த மாசு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி (7.1 சதவீதம் ) ஆயில் (2.90) கியாஸ் (6 சதவீதம்) என காற்று மாசடைவது தெரியவந்துள்ளது.

    இந்தியா 7 சதவீதம்

    இந்தியா 7 சதவீதம்

    கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை சீனா (27 சதவிகிதம்) அமெரிக்கா (15 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (10 சதவீதம்), இந்தியா (7 சதவீதம்) என மூன்றுகள் நாடுகள் இடம்பெற்றுள்ளன. தற்போது, 41 சதவீதமாக உள்ள காற்றுமாசு, 2018 ம் ஆண்டில் 1.8 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே கண்ணுக்கு தெரியாத அளவு காற்று மாசு ஏற்படுகிறது. பலருக்கு மூச்சு திணறல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

    பட்டியல்

    பட்டியல்

    சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவுதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. 2015 ம் ஆண்டு பாரிஸ் மாநாட்டில் கூறப்பட்டது போல, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் காற்று மாசுவை கட்டுப்படுத்த உத்வேகம் எடுத்துக்கொண்டன. அதன்படி, இந்த குறிப்பிட்ட நாடுகளில் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு 40 சதவீதமாக குறைந்துள்ளது. அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா சபையில் நடக்கும் கூட்டத்திலும், இந்த கூட்டமைப்பு நாடுகள் புதிய உக்தியை முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆய்வு முடிவுகள்

    ஆய்வு முடிவுகள்

    இந்தியாவில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றுவதில் வழக்கத்தை காட்டிலும் 2017-ம் ஆண்டு 2 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவிலும், இந்தியாவிலும் பொருளாதார ரீதியாக நிலக்கரி பயன்பாடு அதிகமாக உள்ளது. இதற்கு மாற்றாக 2020 ம் ஆண்டுக்குள் சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சார பயன்பாடு அதிகரித்தால் காற்று மாசு குறையும் என சோலார் எனர்ஜி கூட்டமைப்பு நாடுகள் மாநாட்டில் இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A study has said India is the fourth highest emitter of carbon dioxide in the world, accounting for 7 percent of global emissions in 2017.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X