SIR: கர்நாடகா - தெலுங்கானா உள்பட 22 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் - அறிவித்த தேர்தல் ஆணையம்
டெல்லி: நம் நாட்டில் முதற்கட்டமாக SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து அடுத்தக்கட்டமாக கர்நாடகா, தெலுங்கானா உள்பட மீதமுள்ள 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் மாதம் SIR பணிகள் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ‛‛வாக்காளர் பட்டியல்களை புதுப்பிப்பதற்கும், வாக்காளர் பட்டியலின் துல்லியத்தன்மையை உறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்த பணிகள் சீராகவும், சரியான நேரத்திலும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து முடிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதத்தில் ஆந்திர பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், தாதர் மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் , ஜார்க்கண்ட், கர்நாடகா, லடாக், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, தேசிய தலைநகர் பிரதேசம் டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலுங்கானா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடங்க உள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டது.
அதன்படி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது 22 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்.. ஏப்.6 ஆம் தேதி வெளியாகும் புதிய வாக்காளர் பட்டியல்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு












Click it and Unblock the Notifications