டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கங்கண சூரிய கிரகணத்தை லடாக், அருணாசலபிரதேசத்தில் பார்க்கலாம் - எப்போது தெரியும்

இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணத்தை இந்தியாவின், லடாக், அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்கள் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: 2021ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று பிற்பகலில் நிகழ்கிறது. கங்கண சூரிய கிரகணத்தை உலகின் சில பகுதிகளில் இருப்பவர்களால் மட்டுமே பார்க்க முடியும் என நாசா கூறியுள்ளாது. இந்தியாவில் வேறு எங்கும் தெரியாது என்று கூறப்பட்ட நிலையில் சூரியன் மறையும் மாலை நேரத்தில்
லடாக், அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்கள் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், கடந்த மே 26 ந்தேதி நிகழ்ந்தது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. வழக்கமாக சந்திர கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களில் சூரிய கிரகணம் நிகழும்.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று பிற்பகலில் நிகழ்கிறது. கங்கண சூரிய கிரகணத்தை உலகின் சில பகுதிகளில் இருப்பவர்களால் மட்டுமே பார்க்க முடியும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் - வானத்தில் சூரியனின் நெருப்பு வளையத்தை எங்கு பார்க்கலாம்இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் - வானத்தில் சூரியனின் நெருப்பு வளையத்தை எங்கு பார்க்கலாம்

சூரியனை மறைக்கும் நிலவு

சூரியனை மறைக்கும் நிலவு

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது, அது சூரிய மறைப்பு அல்லது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. வானத்தில் நிகழும் அரிய நிகழ்வான சூரிய கிரகணத்தின் போது சூரியனை முழுமையாக மறைக்கும் அளவுக்கு நிலவு இருக்காது.

நெருப்பு வளையம்

நெருப்பு வளையம்

சூரியன் நிலவை மறைக்கும் அந்த நேரத்தில், முழுமையாக மறைக்க முடியாமல் சூரியனின் கருப்பு பகுதியைச் சுற்றிலும் ஒரு நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கங்கண சூரிய கிரகணம் ஆகும். இந்த கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்குத் தொடங்கி மாலை 6.41 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யாரால் பார்க்க முடியும்

யாரால் பார்க்க முடியும்

கனடாவின் சில பகுதிகள், வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும். கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாகப் பார்க்க முடியும் என நாசா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியர்கள் பார்க்க முடியுமா

இந்தியர்கள் பார்க்க முடியுமா

இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலானவர்களால் பார்க்க முடியாது. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்களால் மட்டும் பகுதியாக இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் பகுதியில் காணலாம்

லடாக் பகுதியில் காணலாம்

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திபாங் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலிருந்து மாலை 5:52 மணியளவில் சூரிய கிரகணத்தின் மிகச் சிறிய பகுதியை மக்கள் காணலாம். சூரியன் மறையும் மாலை நேரத்தில் மாலை 6.15 மணியளவில் லடாக்கின் வடக்கு பகுதியில், கிரகண நிகழ்வின் கடைசி நேர நிகழ்வினைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரலையில் ஒளிபரப்பு

நேரலையில் ஒளிபரப்பு

இந்தியாவில் இருந்து சூரிய கிரகணத்தை, நேரடியாகப் பார்க்க முடியவில்லை என்றாலும் இணையத்தில் காணலாம். Timeanddate.com இணையத்தில், https://www.timeanddate.com/live/eclipse-solar-2021-june-10 இணைய முகவரியில் நேரலையாக ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Watch Surya Grahan from Arunachal's Dibang Wildlife Sanctuary at 5.52 pm today. On the northern borders of India, in Ladakh, a sliver of land in the border region can experience the last phase of the partial eclipse, again for a short duration, but relatively at a higher altitude than the eastern part of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X