ராஜஸ்தானில் பெனிவால் அதிரடி.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக, காங்கிரசுக்கு இப்படி ஒரு சிக்கல்!
டெல்லி: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், இம்முறை போட்டி அதிகமாக உள்ளது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முந்தைய தேர்தல்களை விட இந்த தேர்தல் களம் அங்கு மாறுபட்டதாக உள்ளது. இத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் ஆளும் பாஜக நடுவே மட்டுமின்றி, பல முனை போட்டி உறுதியாகியுள்ளது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, கன்ஷியாம் திவாரியின் பாரத் வாகினி கட்சி மற்றும் ஹனுமான் பெனிவாலின், ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி போன்றவை, முழு பலத்தோடு களமிறங்கியுள்ளன. அதிலும் ஹனுமான் பெனிவால் போன்றோர் கட்சிதான், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் ஓட்டை போடும் சூழ்நிலை உள்ளது.

பெனிவால்
நாகூர் சட்டசபை தொகுதியில், 2013ம் ஆண்டு சுயேட்சையாக வெற்றி பெற்ற பெனிவால், இம்முறை சொந்த கட்சியை கட்டி எழுப்பி களம் காண்கிறார். 65 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இந்த தொகுதிகளில், பாஜக-காங்கிரசின் வாக்கு வங்கி சிதறும் வாய்ப்பு உள்ளது.

ஜாட் ஜாதி
ராஜஸ்தானில் பெரும்பான்மையாக உள்ள ஜாட் இனத்தை சேர்ந்தவர், பெனிவால். ஜாட் மற்றும் தலித் வேட்பாளர்களை அதிக அளவில் அவரது கட்சி களமிறக்கியுள்ளது. இவ்விரு ஜாதியினரும் முறையே, பாஜக மற்றும் காங்கிரசின் வாக்கு வங்கிகளாகும். அவர்களின் வாக்குகளை ஈர்ப்பது பெனிவால் நோக்கம்.

மோதல்
ஜாட் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பெனிவால், நடத்திய போராட்டங்கள் பிரசித்தி பெற்றதாகும். பெனிவால் 2008ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். வசுந்தரா ராஜேவுடனான கருத்து வேறுபாடால் கடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதிருப்தியாளர்கள்
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்தவர்களை ஈர்த்து பெனிவால் தனது கட்சியில் சீட் கொடுத்துள்ளார். வசுந்தராஜே சிந்தியா மற்றும் காங்கிரஸ் கட்சியின் சீனியர் (அதிகாரப்பூர்வற்ற முதல்வர் வேட்பாளர்) அசோக் கெலாட் ஆகியோரை, தாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.

வாக்குகளை ஈர்ப்பார்
இதுகுறித்து அரசியல் வல்லுநர்களிடம் கேட்டபோது, நாகூர் மாவட்டத்தில் பெனிலால் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க கூடும். பிற மாவட்டங்களில் பெரிய தாக்கம் இருக்காது என்கிறார்கள். ஆனால், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் செல்லும் வாக்குகளை பல மாவட்டங்களில் பெனிவால் கட்சி இழுக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications