33ம் ஆண்டு நினைவு நாள்.. ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் சோனியா, கார்கே அஞ்சலி.. மோடி இரங்கல்
டெல்லி: தமிழ்நாட்டில் தற்கொலை படைத்தாக்குலில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசியல் வாரிசாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர் அரசியலுக்குள் வந்து தாய் இந்திரா காந்தி விட்டு சென்ற பிரதமர் பதவியை எட்டிப்பிடித்தார்.

அதன்பிறகு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பத்தூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மே 21ம் தேதியான இன்று ராஜீவ்காந்திக்கு 33வது நினைவுநாளாகும். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு சென்று இன்று அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் பிரதமர் மோடியும், ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் டெல்லி, தமிழ்நாடு உள்பட ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திலும் நிர்வாகிகள், தொண்டர்கள் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திலும் நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications