டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கும் நாகாலாந்தில் சீனா நடத்திய வெளவால் ஆராய்ச்சிக்கும் தொடர்பா? வெடிக்கும் சர்ச்சை

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவின் வுகானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆராய்ச்சி நிறுவனம், நாகாலாந்தில் வெளவால் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சி குறித்து விசாரணை நடத்துவதை ஆதரிப்பதாக பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

2017-ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் இயங்கி வரும் வைராலாஜி நிறுவனம், டாடா ஆய்வு நிறுவனம், சிங்கப்பூர் நிறுவனம் ஆகியவை இணைந்து நாகாலாந்தில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டன. அமெரிக்காவின் நிதி உதவியுடன் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

Subramanian Swamy on Wuhan’s study of Nagaland bat populations

நாகாலாந்தில் வெளவால் பெருக்கம் மற்றும் அவற்றை வேட்டையாடுபவர்களையும் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. வெளவாலை வேட்டையாடும் 85 வேட்டைக்காரர்களின் ரத்த மாதிரிகளும் ஆராய்ச்சிக்காக எடுக்கப்பட்டன. இந்த விவகாரம் அப்போதே சர்ச்சையானது.

இந்த நிலையில் கடந்த மாதம் கொரோனா வைரஸ், சீனாவுன் வுகான் மாகாணத்தில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. சீனாவில் இந்த வைரஸ் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகளில் தாண்டவமாடி வருகிறது கொரோனா.

ஆகையால் நாகாலாந்தில் வுகான் மாகாண ஆய்வு நிறுவனம் என்ன ஆராய்ச்சியை நடத்தியதை என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. தற்போது பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பதிவில் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இந்த விசாரணை தொடர்பான செய்தியை ரீ ட்வீட் செய்திருக்கிறார்.

நெருப்பில்லாமல் புகையுமா?

English summary
BJP Rajysabha MP Subramanian Swamy tweet on the Gov't recent probe on Wuhan’s study of Nagaland bat populations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X