டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நாளை ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம்- நாடு தழுவிய ஓவிய பயிற்சி பட்டறை!
டெல்லி : தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு நாள் விழா டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில், தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் நாளை தொடங்கி வைக்கிறார்.
'மெட்ராஸ் மாகாணம்' என்று இருந்ததைமாற்றி மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா, கடந்த 1967- ஆம் ஆண்டு ஜூலை18-ஆம் நாள், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 'தமிழ்நாடு'என்று பெயரிட்டார். அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ்ஆர்வலர்கள் என பலதரப்பிலும் வலியுறுத்தி வந்தனர்.

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளைக் கவனமாகப் பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய, ஜூலை 18 ஆம் நாளை, தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் 'தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு திருநாள் விழா' நாளை கொண்டாடப்படுகிறது.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 'தமிழ்நாடு திருநாள்' விழா, நாளை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் விழாவைத் தொடங்கிவைத்து, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றுகிறார்.
இவ்விழாவிற்கு, கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா தலைமை ஏற்கவும், உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, முன்னிலை வகிக்கவும் உள்ளனர். நாளை காலை 10.00 மணிக்கு வைகை தமிழ்நாடு இல்லத்தில், அகில இந்திய ஓவிய பயிற்சிப் பட்டறை மற்றும் ஓவியப்போட்டி தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியம், வாழ்க்கை, முறைபண்பாடு, சுற்றுலா ஆகிய தலைப்புகளில், அகில இந்திய அளவில் ஓவியப் பயிற்சி பட்டறை மற்றும் போட்டி நடைபெறும்.
இதில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஓவிய கலைக் கல்லூரிகளில் பயிலும் 30 மாணாக்கர்கள் பங்கேற்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் 13 மாணவர்கள், தெலுங்கானாவின் 3 மாணவர்கள், ராஜஸ்தானின் 5 மாணவர்கள், மும்பையின் 3 மாணவர்கள் ,டெல்லியின் 3 மாணவர்கள், குஜராத்தின் 3 மாணவர்கள் என மொத்தம் 30 மாணாக்கர்கள், ஐந்து நாட்கள் தங்கி பயிற்சி பெறவுள்ளனர்.
பின்னர் பயிற்சிபெற்ற மாணாக்கர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் தமிழ்நாடு இல்லத்தில் இரண்டு நாட்கள் காட்சிப்படுத்தப்படும். இதில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.30,000-மும் மூன்றாம் பரிசாக ரூ.20,000-மும் வழங்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
இதனைதொடர்ந்து, காலை 10.30 மணிக்கு பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் 'தமிழ்நாடுதிருநாள் விழா' நடைபெற உள்ளது. இதில் நிளஅளவைத்துறை சார்பில், தமிழ்நாடு வரைபடங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு இயல், இசை,நாடக மன்றத்தின் சார்பாக கிராமியக் கலைநிகழ்ச்சிகள் கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து, மதியம் 1.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு ராக்கெட்ரி தமிழ் திரைப்படம் திரையிடப்படும் என டெல்லி தமிழ்நாடு இல்லம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு திருநாள் விழாவை முன்னிட்டு, பொதிகை, வைகை தமிழ்நாடு இல்லங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications