Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸில் இணையாத பிரசாந்த் கிஷோர்... 4 முக்கிய காரணங்கள்... பரபரப்பு தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைய மறுத்த நிலையில் அதற்கான காரணங்கள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தியை நியமிக்க வேண்டும் என்பது முதல் அதிகாரம் செலுத்தும் பதவி, கட்சி சீர்த்திருத்தத்தில் முழுசுதந்திரத்தை காங்கிரஸ் கட்சி வழங்க மறுத்ததால் பிரசாந்த் கிஷோர் விலகி இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர் தோல்விகளில் துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் வகையில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அக்கட்சியில் இணைவதாக சமீப காலமாக தகவல்கள் பரவின.

கடந்த 10 நாட்களா அடிக்கடி பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை தொடர்ச்சியாக சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வந்தார்.

காங்கிரசுடன் ஆலோசனை

காங்கிரசுடன் ஆலோசனை

விரைவில் நடைபெற உள்ள குஜராத், சத்தீஸ்கார் மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தல் தொடர்பான வியூகங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தியிடம் கூறினார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் 2024ம் ஆண்டுக்கான செயல் திட்ட குழு உருவாக்கப்பட்டது. மேலும் பிரசாந்த கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினரும் தீவிர ஆலோசனைகள் நடத்தினர்.

இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர்

இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைய மறுத்துவிட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியில் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று தெரிவித்தார். இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோரும் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛காங்கிரஸ் கட்சிக்கு என்னை விட தலைமையே தேவை. கட்சியின் வேரூன்றி இருக்கும் அமைப்பு ரீதியான பிரச்சினைகளை சீர்த்திருத்தம் மூலம் சரிசெய்ய கூட்டு தலைமை அவசியம். காங்கிரஸ் கட்சியில் சேரவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்க கங்கிரஸ் விடுத்த கோரிக்கையை நான் ஏற்கவில்லை.'' என குறிப்பிட்டு இருந்தார்.

இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர்

இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைய மறுத்துவிட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியில் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று தெரிவித்தார். இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோரும் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛காங்கிரஸ் கட்சிக்கு என்னை விட தலைமையே தேவை. கட்சியின் வேரூன்றி இருக்கும் அமைப்பு ரீதியான பிரச்சினைகளை சீர்த்திருத்தம் மூலம் சரிசெய்ய கூட்டு தலைமை அவசியம். காங்கிரஸ் கட்சியில் சேரவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்க கங்கிரஸ் விடுத்த கோரிக்கையை நான் ஏற்கவில்லை.'' என குறிப்பிட்டு இருந்தார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்தததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. அதாவது உயரதிகாரம் கொண்ட பதவி கிடைக்காதது, தேர்தல்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் கிடைக்காதது ஆகியவற்றால் தான் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய மறுத்ததாக கூறப்படுகிறது. அதன் விபரங்கள் வருமாறு:

முழுசுதந்திரம் மறுப்பு

முழுசுதந்திரம் மறுப்பு

காங்கிரஸ் கட்சியில் சீர்த்திருங்கள் மேற்கொள்ள வேண்டும் என பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியிடம் கூறினார். கட்சியில் சீர்த்திருத்தம் செய்வதற்கான முழு சுதந்திரத்தை வழங்க வேண்டும் என அவர் காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்தி உள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு உடன்பாடில்லை. தங்களின் பதவி பறிபோகும் என நினைத்து அவர்கள் துவக்கத்தில் இருந்தே பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைவதை விரும்பவில்லை. மேலும் கட்சியில் புதிதாக வரும் நபருக்கு எப்படி அனைத்து உரிமைகளையும் வழங்குவது என அவர்கள் நினைத்தனர். இதில் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், முகுல் வாஷ்னிக், ரன்தீப் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு உடன்பாடில்லை. இதை அவர்கள் பகிரங்கமாக காட்டவில்லை என்றாலும் மனதில் அதை வைத்து தான் பல கேள்விகளை பிரசாந்த் கிஷோரிடம் கேட்டுள்ளனர். பிரசாந்த் கிஷோரின் இந்த எண்ணத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றவில்லை.

 காங்கிரஸ் தலைவராக பிரியங்கா

காங்கிரஸ் தலைவராக பிரியங்கா

மேலும் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் என தனி நியமனம் செய்ய பிரசாந்த் கிஷோர் விரும்பினார். காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தியை அவர் நியமிக்க விருப்பம் தெரிவித்ததற்கு ராகுல் காந்தியை தான் தலைவராக்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே உடன்படாடு ஏற்படவில்லை.

அதிகாரம் படைத்த பதவி

அதிகாரம் படைத்த பதவி

மேலும், குஜராத், மத்திய பிரதேசம், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் முக்கிய முடிவுகள் தான் எடுப்பதாகவும், இதில் தலையீடு இருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி 2024 மக்களவை தேர்தலில் கவனம் செலுத்தும்படி அவரிடம் கூறியது. இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும், கட்சியில் உள்ளவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரம் படைத்த பதவியையும் அவர் எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் ஈடேறவில்லை. இதனால் பிரசாந்த் கிஷோர் பின்வாங்கினார்.

சந்திர சேகரராவுடன் சந்திப்பு

சந்திர சேகரராவுடன் சந்திப்பு

மேலும் காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த வேளையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை, பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். தேர்தல் தொடர்பான ஒப்பந்தம் தொடர்பாக இருவரும் பேசினர். இது பிரசாந்த் கிஷோர் மீதான நம்பிக்கையை சீர்குலைத்தது. அதாவது காங்கிரஸ் கட்சியில் அவர் இருந்தாலும் பிற கட்சிகளுக்கும் அவர் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தால் அது சரியாக இருக்காது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வியூகங்களை அறிந்தவர் இத்தகைய செயலில் ஈடுபடுவது என்பது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியிடம் கூறினர். இதை சோனியா காந்தியும் கவனத்தில் எடுத்து கொண்டார். இதுபோன்ற காரணங்களால் தான் காங்கிரஸ் - பிரசாந்த் கிஷோர் இடையேயான உறவு முறிந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+