புலி கம்பீரமா நடந்து, உருமி பார்த்திருப்பீங்க.. ஆனா, பயந்து பார்த்திருக்கீங்களா?

புலி பயந்து போய் காட்டைப் பார்க்கும் புகைப்படம் ஒன்று சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காட்டைப் பார்த்து புலி ஒன்று மிரண்டு போய் பயத்தோடு பார்க்கும் புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.

காட்டில் எத்தனையோ விலங்குகள் இருந்தாலும், புலி, சிங்கம் போன்ற ஒரு சில விலங்குகள்தான் வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் பேர் போனவைகளாக உள்ளன. அதனாலேயே உயிரியல் பூங்காவிற்கு செல்பவர்கள்கூட மற்ற விலங்குகளைவிட இவற்றைப் பார்ப்பதற்கே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதிலும் குறிப்பாக புலியின் உறுமலும், கம்பீரமும் பார்ப்பவர்களை பயத்தில் மிரள வைக்கும். கூண்டிற்குள் இருக்கும் போதே இப்படி மிரட்டுகிறதே, இது காட்டில் எப்படி கம்பீரமாக உலா வரும் என்ற எண்ணம் உயிரியல் பூங்காவில் புலியைப் பார்க்கும் போது நமக்குத் தோன்றும்.

ஆனால், அப்படி நம்மை பார்வையால் மிரட்டும் புலியே, காட்டைப் பார்த்து மிரண்டு போன புகைப்படம் ஒன்றுதான் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

புலியின் ரியாக்சன்

புலியின் ரியாக்சன்

TyRellington என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சில வன விலங்குகளை மீண்டும் காட்டில் விட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கீரீன்ஷாட் தான் அந்தப் புகைப்படம். காட்டில் இறக்கி விடுவதற்காக அழைத்து வரப்பட்ட அந்தப் புலி, காட்டை மிரட்சியுடன் பார்ப்பது அந்தப் புகைப்படத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது.

என்னா பயம்..

என்னா பயம்..

காட்டைப் பார்த்து, 'திரும்பவும் இங்கயா..?' என கண்களில் மட்டுமல்ல.. முகம் முழுவதும் பயத்தை வெளிக்காட்டி இருக்கிறது அதிர்ச்சியில் வாயைத் திறந்தபடி உள்ளது அந்தப் புலி. 'அட புலி இப்படியெல்லாம் பயப்படுமா?' என பார்த்தவுடன் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது அந்தப் புகைப்படம். பிறகென்ன, இதனை தங்களது நண்பர்களுக்கு பகிர்ந்து கலாய்க்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.

 சோம்பேறி போல...

சோம்பேறி போல...

கூடவே இந்தப் புகைப்படத்தை வைத்து நகைச்சுவையான கமெண்ட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். 'நிச்சயம் இந்தப் புலி சோம்பேறியாகத்தான் இருக்க வேண்டும். திரும்பவும் தனக்கான உணவைத் தானே தேடி அலைந்து சாப்பிட வேண்டுமே என்பதை நினைத்து கவலையில்தான் இப்படி பயந்து போன உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறது' என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

 மீம்ஸ்கள்

மீம்ஸ்கள்

இதுவரை 431 ஆயிரத்திற்கும் மேலான லைக்குகளையும் இந்தப் புகைப்படம் பெற்றுள்ளது. புலியின் இந்த ரியாக்‌ஷனை வைத்து ஏராளமான நகைச்சுவையான மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன. மிரட்டும் கண்களோடு நாம் கம்பீரமாகவே பார்த்துப் பழகிய புலி, இப்படி ஒரு ரியாக்‌ஷனைத் தந்திருப்பது பார்ப்பதற்கு காமெடியாக வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+