இந்தியாவுக்கும் வந்துவிட்டது உருமாறிய கொரோனா... 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதி..!
டெல்லி: இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டது.
இதுவரை வீரியமிக்க உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியாவில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 பேரும் லண்டனில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்குள் வந்தது
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இப்போது தான் படிபடியாக இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதிய அதிர்ச்சியாக லண்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் மூலம் உருமாறிய கொரோனா இங்கும் நுழைந்துவிட்டது.

மிகவும் வீரியமானது
இந்த உருமாறிய கொரோனா வைரஸானது பழைய வைரஸை விட மிகவும் வீரியமானது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகக் கடுமையானது. கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய ஆயிரக்கணக்கானோரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

20 பேருக்கு தொற்று
அதில் 20 பேருக்கு வீரியமிக்க உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று வரை 6 பேருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இன்று மேலும் 14 பேருக்கு புதிதாக உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியா முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 20 பேர்களில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இருக்கிறார்.

கோவேக்சின்
இதனிடையே ஆரம்பக்கட்டத்திலேயே இந்த விவகாரத்தை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உருமாறிய கொரோனா தொற்றை இந்தியாவில் முற்றிலும் ஒழிக்க தீவிரம் காட்டி வருகிறது. கோவேக்சின் கொரோனா தடுப்பு மருந்துக்கு உருமாறிய கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications