நாங்க 100% நடுநிலை.. பிடித்தவர்கள் வென்றால் EVMஐ விமர்சிப்பவர்கள் அமைதியாகின்றனர் -தேர்தல் ஆணையர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்ததில் தேர்தல் ஆணையம் எந்த பாரபட்சமும் காட்டவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்து இருக்கிறார்.

பாஜக ஆளும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவும், டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக குஜராத் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது

இரு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்து இருக்கிறது.

தாமதம் ஏன்?

தாமதம் ஏன்?

இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு குறுகிய இடைவெளிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது ஏன் என்றும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இவ்வளவு தாமதம் காட்டப்பட்டது ஏன் எனவும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் விமர்சனம்

அதேபோல் இமாச்சல பிரதேச தேர்தல் வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் உள்ள கால இடைவெளி குறித்தும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல் ஆணையம் சுயாதீன நிறுவனம். நேர்மையான முறையில் அது தேர்தலை நடத்த வேண்டும்." என பதிவிட்டு இருந்தது.

தலைமை தேர்தல் ஆணையர்

தலைமை தேர்தல் ஆணையர்

தோல்வியின் பயத்தால் காங்கிரஸ் இவ்வாறு தெரிவிப்பதாக பாஜக பதிலடி கொடுத்து உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அளித்துள்ள விளக்கத்தில், "பல்வேறு காரணங்களால் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போனது. ஒரு சார்பாக நடந்துகொண்டோம் என்பதை ஏற்க முடியாது.

100% நடுநிலை

100% நடுநிலை

குஜராத் பால விபத்தும் இந்த தாமதத்திற்கு ஒரு காரணம். 100% நாங்கள் நடுநிலையோடு இருக்கிறோம். வானிலை, ஆட்சிக்காலம் நிறைவு, குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் ஒன்றாக நடைபெற்று வரும் பாரம்பரியம் என பல விசயங்களை பரிசீலித்தே தேர்தல் தேதியை முடிவு செய்தோம்.

எதிர்மறை சூழல்

எதிர்மறை சூழல்

சிலர் எதிர்மறையான சூழலை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். செயல்களும், முடிவுகளும் பேச்சை விட சத்தமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கப்போகிறேன் என்பது பெரிய விசயமல்ல. விமர்சனம் செய்பவர்களே ஆச்சிரியப்படும் அளவுக்கு முடிவுகள் வருகின்றன.

வாக்குப்பதிவு இயந்திரம்

வாக்குப்பதிவு இயந்திரம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து மக்கள் விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும்போது அமைதியாக இருந்து விடுகின்றனர். குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் காலம் என்பது 38 நாட்கள். டெல்லி தேர்தலிலும் இதே அளவுதான் இருந்தது.

காலம் உள்ளது

காலம் உள்ளது

குஜராத் மாநில அரசின் பதவிக்காலம் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை உள்ளது. எனவே இன்னும் நேரம் இருக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலத்துக்கும், குஜராத் மாநில அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்கும் இடையே 72 நாட்கள் உள்ளன." என்று அவர் விளாக்கம் அளித்தார்.

குஜராத் பால விபத்து

குஜராத் பால விபத்து

குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவது, குஜராத் மாநில தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாகுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "தேர்தல் போட்டிக்கான சமநிலை எந்த முடிவால் பாதிக்கப்பட்டாலும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+