டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்- மகிந்தவுடனான சந்திப்பில் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் இலங்கையும் ஒத்துழைப்பை அதிகரிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு 4 நாட்கள் பயணமாக நேற்று வருகை தந்தார் மகிந்த ராஜபக்சே. டெல்லியில் இன்று பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை மகிந்த ராஜபக்சே சந்தித்து பேசினார்.

 We will increase cooperation against terror with Srilanka: PM Modi

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் மகிந்த ராஜபக்சேவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

ஓட்டுப்போட வரிசையில் நிற்கும் முஸ்லீம் பெண்கள்.. கர்நாடக பாஜக வெளியிட்ட சர்ச்சை டுவிட்ஓட்டுப்போட வரிசையில் நிற்கும் முஸ்லீம் பெண்கள்.. கர்நாடக பாஜக வெளியிட்ட சர்ச்சை டுவிட்

இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய நட்பு நாடுகள். இருநாடுகளுக்கும் பொதுவான பிணைப்புகள் உண்டு. பயங்கரவாதம் மிகப் பெரும் பிரச்சனையாக உள்ளது.

இந்தியாவும் இலங்கையும் கூட்டாக பயங்கரவாதத்துக்கு எதிராக பதிலடி தருவோம். பயங்கரவாதத்துக்கு எதிரான இருநாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிப்போம். இருநாடுகளிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இருநாட்டு மக்களை இணைக்கக் கூடிய சுற்றுலா உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

English summary
Prime Minister Modi said that India Will increase cooperation against terror with Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X