என்ன செய்கிறார் ராம்நாத் கோவிந்த்? ஆடம்பர பங்களா முதல்.. இத்தனை சலுகைகளா? மனைவிக்கும் ஓய்வூதியமாம்!
டெல்லி : இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுள்ள நிலையில் ஓய்வு பெற்றுள்ள குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லியில் ஆடம்பர பங்களா ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவருக்கு கிடைக்கும் சலுகைகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தன் பதவிக்காலம் கடந்த ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து 15 வது இந்திய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து யஸ்வந்த் சின்ஹா போட்டியிட்டார்.

ராம்நாத் கோவிந்த்’
பாஜக கூட்டணி கட்சியினர் மட்டுமல்லாமல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். பகுஜன் சமாஜ். சிரோமணி அகாலி தளம் சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு போட்டியிட்ட திரௌபதி முர்மு இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இதை அடுத்து குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் ஓய்வு பெற்றார்.

பின்னணி என்ன?
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் கான்பூரில் பட்டப் படிப்பை முடித்த அவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அதிகாரியாக பணியாற்றவில்லை. தொடர்ந்து ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் 1990ஆம் ஆண்டு பாஜக வேட்பாளராக களம் இறங்கினார். தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு பீஹார் ஆளுநராக பொறுப்பு வகித்தார். பின்னர் தான் குடியரசு தேர்தலில் வெற்றி பெற்ற அவர் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்தார். தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ள அவர் டெல்லி ராஜ்பாத் சாலையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் லொடியன்ஸ் வளாகத்தில் ஆடம்பர பங்களா ஒன்றில் குடியேறியுள்ளார்.

சலுகைகள்
அங்கேயே தனது இறுதி காலம் வரை மனைவியுடன் தங்கி இருப்பார் என கூறப்படுகிறது. 12-ம் எண் கொண்ட அந்த பங்களாவில் 24 மணி நேரம் குடிநீர், மின்சாரம், தொலைபேசி, பிராட் பேண்ட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. அவரது வீட்டுக்கு மிக அருகில் தான் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தங்கி உள்ளனர். இனிமேல் சோனியாவும் ராகுலும் ராம்நாத் கோவிந்துக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வசதிகள்
இது மட்டுமல்லாமல் ராம்நாத் கோவிந்த் ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் என்பதால் அவருக்கு ஒரு தனி செக்ரட்டரி, கூடுதல் செகரட்டரி, ஒரு உதவியாளர் மற்றும் இரண்டு பியூன்களை வைத்துக் கொள்ளலாம். அலுவலக செலவுக்காக ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் அவருக்கு வழங்கப்படும். மேலும் தொலைபேசி செல்போன் மற்றும் ஒரு கார் ஆகியவை அரசு செலவிலேயே வழங்கப்படும் அது மட்டுமல்லாமல் கார் ஓட்டுநருக்கான செலவையும் அரசை ஏற்றுக் கொள்ளும்.

மனைவிக்கும் ஓய்வூதியம்
இது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரயில் மற்றும் விமான பயணங்களில் முதல் வகுப்பு டிக்கெட் அவருக்கு இலவசமாக கிடைக்கும். குடியரசுத் தலைவராக இருந்த போது 5 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு தற்போது 2 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இது மட்டுமல்லாமல் இலவச மருத்துவ சிகிச்சைகள் ஆகியவை வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் அவரது மனைவிக்கும் 25 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Recommended Video

பாதுகாப்பு
தற்போது அந்த பங்களாவில் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் வசித்து வருகின்றனர். காலை எழுந்தவுடன் வழக்கமான பணிகளுக்கு பிறகு தொலைக்காட்சி செய்தித்தாள் பார்ப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வரும் ராம்நாத் கோவிந்த், பின்பு தோட்டத்தில் உலா வருவதாகவும் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி திரைப்படங்கள் பார்த்து நேரத்தை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது. அவரது வீட்டுக்கு 24 மணி நேரமும் டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications