டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புத்தாண்டு வாழ்த்து! காஷ்மீர் எங்கயா காணோம்! இந்தியாவில் இருக்கனுமா வேணாமா? பணிந்த வாட்ஸ் அப்!

Google Oneindia Tamil News

டெல்லி : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட வாழ்த்து வீடியோவில் இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இல்லாததால் கடும் சர்ச்சை எழுந்த நிலையில், மத்திய அமைச்சரின் எச்சரிக்கையை அடுத்து அந்த வாழ்த்து வீடியோவை வாட்ஸ் அப் நீக்கி உள்ளது.

சுதந்திரம் பெற்றதிலிருந்தே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் பிரச்சினை இருந்து வருகிறது இந்தியாவின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் முழு காஷ்மீரையும் அந்நாடு சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் பல போர்களையும் இரு நாடுகளும் சந்தித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என இந்தியா அழைத்து வருகிறது.

ஏற்காட்டில் அசைவ விருந்துடன் மது.. முதல் முறை குடித்த இளைஞர் பலி.. புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்! ஏற்காட்டில் அசைவ விருந்துடன் மது.. முதல் முறை குடித்த இளைஞர் பலி.. புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்!

காஷ்மீர் விவகாரம்

காஷ்மீர் விவகாரம்

அதே நேரத்தில் ஆக்கிரமிப்பு பகுதிகள் மட்டுமல்ல முழு காஷ்மீரும் தங்களுக்கு தான் சொந்தம் என பாகிஸ்தான் கூறி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் கோரினாலும் இந்தியாவின் பலம் மற்றும் அரசியல் நகர்வுகள் காரணமாக வெளிநாடுகள் தலையிடுவதில்லை. இடையே சில நாடுகள் கருத்து தெரிவித்தாலும் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியா எச்சரிக்கை விடுத்து வருகிறது.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

இந்த நிலையில் தான் பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா தலைமையில் இயங்கும் வாட்ஸ்அப் நிறுவனம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. புத்தாண்டு தொடங்கியதை முன்னிட்டு நேற்று வாட்ஸ் அப் நிறுவனத்தின் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்து பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்று இருந்த நிலையில் அதனைப் பார்த்த பல இந்தியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

காஷ்மீர் நீக்கம்

காஷ்மீர் நீக்கம்

காரணம் வாட்ஸ் அப் வெளியிட்டு இருந்த வாழ்த்து வீடியோவில் இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடம் பெறவில்லை. திட்டமிட்டு வாட்ஸ் அப் காஷ்மீரை இந்திய வரைபடத்தில் இருந்து நீக்கிவிட்டதாக புகார் எழுந்தது. ஏற்கனவே இதே போன்ற ஒரு புகாரில் ஜூம் நிறுவனம் சிக்கியதும் அதன் பிறகு மன்னிப்பு கேட்டு அந்த பதிவை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது. அப்போது மத்திய அரசு சார்பில் கடும் கண்டனங்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது

ராஜீவ் சந்திரசேகா்

ராஜீவ் சந்திரசேகா்

இதனிடைய வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட மேப்பில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் சீனாவை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளும் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதை அடுத்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் ட்விட்டர் பதிவுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகா் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தியாவின் வரைபடம் தொடர்பாக தவறான தகவல் இடம்பெற்று இருப்பதாகவும் இதை வாட்ஸ் அப் சரி செய்ய வேண்டும் என கூறினார்.

மன்னிப்பு

மன்னிப்பு

அந்தப் பதிவில் வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவையும் டேக் செய்திருந்தார். இதை அடுத்து மெட்டா நிறுவனம் உடனடியாக அந்த வீடியோவை நீக்கியதோடு எதிர்பாராத தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி எங்கள் வீடியோ நீக்கப்பட்டுள்ளது வரும் நாட்களில் கவனத்தோடு செயல்படுவோம் என விளக்கம் அளித்து இருக்கிறது.

English summary
In the greeting video released by WhatsApp company on the occasion of English New Year, there was a lot of controversy due to the absence of Kashmir on the map of India. After the Union Minister's warning WhatsApp deleted the greeting video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X