டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூய்மை நகரங்கள் பட்டியல்... தொடர்ந்து 4ம் ஆண்டு... இந்தூர் முதலிடம்... சூரத் 2ஆம் இடம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: தொடர்ந்து நான்காவது ஆண்டாக நம்பர் ஒன் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டெல்லியில் ஸ்வச் சர்வேக்ஷன்தான் 2020 விருது வழங்கினார்.

இதுதொடர்பான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் ட்விட்டர் பதிவில், ''நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தூர் முதலிடத்தில் உள்ளது. நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள மக்களும், ஆட்சியாளர்களும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் நகராட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

Which is The Cleanest City in India 2020 under Swachh Survekshan 2020

இந்தூர் நகரம் முதலிடம் பெற்றிருக்க, இரண்டாம் இடத்தை சூரத் பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தை நவி மும்பை பெற்றுள்ளது. இதற்காக குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும், இதேபோல் நவி மும்பை நகராட்சிக்கும் பூரி நன்றி தெரிவித்துள்ளார்.

மறைக்கப்பட்ட பயங்கரம்.. கண்டுபிடித்த அமெரிக்க உளவுதுறை.. சீனாவுக்கு பெரும் சிக்கல்! மறைக்கப்பட்ட பயங்கரம்.. கண்டுபிடித்த அமெரிக்க உளவுதுறை.. சீனாவுக்கு பெரும் சிக்கல்!

பிரதமர் மோடியால் ஸ்வச் சர்வேக்ஷன் திட்டம் 2016ல் துவக்கி வைக்கப்பட்டது. அந்த ஆண்டு தூய்மையான நகரமாக மைசூர் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தூர் முதலிடத்தில் இருந்து வருகிறது. நடப்பாண்டிலும் முதலிடம் பிடித்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஆய்வு ஸ்வச் சர்வேக்ஷன்தான். இதில் 4242 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நாட்டில் 1.9 கோடி பேரிடம் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

English summary
Which is The Cleanest City in India 2020 under Swachh Survekshan 2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X