டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு முன்னர்.. வழக்கு தொடுத்தவர்கள் யார்? யார்? இவர்களின் வாதம் என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

    டெல்லி: அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு முன்னர் வழக்கு தொடர்ந்த மிக முக்கியமான 3 பிரிவுகள் யார் யார்.

    அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் யாருக்கு சொந்தம் என சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் ஆகிய 3 பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர். இதில் கடந்த 2010-இல் இந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம், 3 பிரிவினரும் இடத்தை சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை 3 அமைப்பினரும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதன் அடிப்படையில் தொடர்ந்து 40 நாட்களாக இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 70 ஆண்டுகளாக பிரச்சினைக்குரிய இடமாக கருதப்படும் அயோத்தி வழக்கு குறித்த தீர்ப்பை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகள் வழங்கினர்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அத்வானி 1990-ல் நடத்திய ரத யாத்திரை.. ப்ளாஷ்பேக்அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அத்வானி 1990-ல் நடத்திய ரத யாத்திரை.. ப்ளாஷ்பேக்

    தவறாக கட்டப்பட்டது

    தவறாக கட்டப்பட்டது

    வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னர் இந்த 3 அமைப்பினர் குறித்து தெரிந்து கொள்வோம். அயோத்தி என்பது ராமர் பிறந்த இடம் என ராம் லல்லா என்ற அமைப்பு உரிமை கோருகிறது. அஙகு ராமர் வாழ்ந்தார் என்றும் தவறுதலாக பாபர் மசூதி கட்டப்பட்டுவிட்டது என்றும் வாதம் செய்கிறது.

    யார் இந்த நிர்மோஹி அகாரா

    யார் இந்த நிர்மோஹி அகாரா

    பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தை சொந்தம் கொண்டாடும் சாதுக்களின் அமைப்பிற்கு பெயர் நிர்மோஹி அகாரா. 1959-ஆம் ஆண்டு இந்த இடத்துக்கு இந்த அமைப்பினர் உரிமை கொண்டாடினர். மேலும் இங்கிருந்த மசூதி மூடப்பட்டபிறகு, சர்ச்சைக்குரிய இடத்தில் மத்தியில் குவிமாடத்தில் ராமர் சிலையை நிறுவி வழிபாடு நடத்தி வந்தனர்.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    யார் இந்த சன்னி வக்பு வாரியம்

    யார் இந்த சன்னி வக்பு வாரியம்

    இந்த வழக்கில் முஸ்லிம் தரப்பில் வழக்கு தொடுத்தவர்களில் மிக முக்கியமான அமைப்பு இதுவாகும். 1961-ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கே சொந்தம் என முதலில் வழக்கு தொடுத்தது.

    யார் இந்த முகமது இக்பால் அன்சாரி

    யார் இந்த முகமது இக்பால் அன்சாரி

    இவர் தனி நபராவார். வழக்கு தொடுத்தவர்களில் மிக முக்கியமானவரான முகமது ஹாசிம் அன்சாரியின் மகன் ஆவார். தந்தை 2016-இல் உயிரிழந்த பிறகு இந்த வழக்கை மகன் இக்பால் அன்சாரி தொடர்ந்து நடத்தி வருகிறார். டைலராக இருந்த ஹாசிம் அன்சாரி பாபர் மசூதி அருகே வசித்து வந்தார். வழக்கில் முதல் மனுதாரர் இவர்தான்.

    யார் இந்த சித்திக்

    யார் இந்த சித்திக்

    உத்தரப்பிரதேசத்தின் ஜாமியத் உல் உலேமா ஐ ஹிந்த் ஹிந்த் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் எம் சித்திக். இவர் இந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து தனது அமைப்பு சார்பில் வழக்கு தொடர்ந்தார்.

    யார் இந்த ஷியா வக்பு வாரியம்

    யார் இந்த ஷியா வக்பு வாரியம்

    கடந்த 1946- ஆண்டு பாபர் மசூதி சன்னி பிரிவினருக்கு சொந்தமானது என்பதை விசாரணை நீதிமன்றம் மறுத்தது. இந்த மசூதி சன்னி முஸ்லிமாக பாபரால் கட்டப்பட்டது அல்ல என்றும் ஷியா பிரிவு முஸ்லிமை சேர்ந்த அவரது படைத்தளபதியால் கட்டப்பட்டது என்பதுதான் ஷியா வக்பு வாரியத்தின் வாதம்.

    English summary
    Here are the few litigants in the title suit are Ram Lalla Virajman, Nirmohi Akhara and Sunni Central Waqf Board.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X