டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆர்எஸ்எஸ் அனுதாபி" முத்திரை! 2014 ஆர்எஸ்எஸ் நிகழ்வில்.. அப்துல் கலாம் கலந்து கொள்ளாதது ஏன்! பரபர

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2014இல் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த அப்துல் கலாம் ஏன் கடைசி நேரத்தில் அதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிச் செயலாளர் இருந்தவர் ஆர்.கே.பிரசாத். இவர் "Kalam: The Untold Story" என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில் அப்துல் காலம் தொடர்பாகப் பல புதிய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டு உள்ளார். குறிப்பாக 2014இல் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் அவர் ஏன் பங்கேற்கவில்லை என்பதையும் விளக்கி உள்ளார்.

 தொடரும் பயங்கரம்.. தீவிரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் சுட்டுக்கொலை.. பின்னணியில் பாகிஸ்தான்! தொடரும் பயங்கரம்.. தீவிரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் சுட்டுக்கொலை.. பின்னணியில் பாகிஸ்தான்!

அப்துல் கலாம்

அப்துல் கலாம்

இஸ்ரோவை அடுத்த கட்டத்திற்கு எடுத்த சென்றவர்களில் முக்கியமானவர் அப்துல் காலம். 2002 முதல் 2007 வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர், எளிமைக்குப் பெயர் பெற்றவர். இவரது தனிச் செயலாளர் இருந்த ஆர்.கே.பிரசாத் தனது புத்தகத்தில் அப்துல் கலாம் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் செல்வது முடிவாகி இருந்ததாகவும் அவரது வருகையை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்ததாகத் தெரிவித்து உள்ளார்.

ஆஸ்எஸ்எஸ் தலைமையகம்

ஆஸ்எஸ்எஸ் தலைமையகம்

இருப்பினும், கடைசி நேரத்தில் அப்துல் கலாம் தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் இதனால் ஆர்.எஸ்.எஸ் தலைமை அதிருப்தி அடைந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. இருந்த போதிலும், இந்த நிகழ்வு நடந்து சுமார் ஒரு மாதம் கழித்து ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு அப்துல் காலம் சென்றார். அங்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடம் அவர் கலந்துரையாடினார். இருப்பினும், முன்பு நடந்த குழப்பத்தால் அப்துல் காலம் ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்ற போது, அந்த அமைப்பின் தலைவர்கள் யாரும் அங்கு வரவில்லை.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதனிடையே அவர் முதல் முறை ஏன் தனது முடிவை மாற்றினார் என்பது குறித்து ஆர்.கே.பிரசாத் தனது புத்தகத்தில் விளக்கி உள்ளார். கடந்த மே 2014இல், ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ராம் மாதவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் முன்னிலையில் நடைபெறும் பயிற்சி முகாமில் முன்னாள் குடியரசுத் தலைவர் உரையாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.

ஏற்பாடுகள்

ஏற்பாடுகள்

அந்த முகாம் ஜூன் 12 ஆம் தேதி முடிவடைய இருந்தது. அதற்கு முன் வசதியான தேதியில் அப்துல் கலாமை ஆர்எஸ்எஸ் தலைமையகம் வர அழைத்தனர். இதற்காக ராம் மாதவ் நேரில் வந்து அப்துல் கலாமைச் சந்தித்தார்.. பயிற்சி முகாமின் இறுதி நாளில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அப்துல் கலாம் கலந்துகொள்வார் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன

கடைசி நிமிடத்தில் மாற்றம்

கடைசி நிமிடத்தில் மாற்றம்

இருப்பினும், கடைசி நேரத்தில் அவரது நண்பர்கள் அளித்த அறிவுரையால் அப்துல் கலாம் தனது முடிவைக் கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டார். ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்றால் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்ற முத்திரை குத்தப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவரது பெயரை அந்த அமைப்பு தவறாகப் பயன்படுத்தலாம் என்றும் நண்பர்கள் அறிவுரை வழங்கியதால் அப்துல் காலம் இந்த முடிவை எடுத்ததாக பிரசாத் தனது புத்தகத்தில் தெரிவித்து உள்ளார்.

அதிருப்தி

அதிருப்தி

அதேநேரம் அவரது நண்பர்களின் ஆலோசனையை முழுமையாகக் கேட்கவும் அப்துல் காலம் தயாராக இல்லையாம். இதனால் அந்த குறிப்பிட்ட காலத்தில் தன்னால் வர இயலாது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் சொன்ன அப்துல் கலாம், அதற்கு முன்பு வருவதாகத் தெரிவித்து உள்ளார். இருப்பினும், அவரது வருகைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வைத்து இருந்ததால் ஆர்எஸ்எஸ் இந்த முடிவால் அதிருப்தி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

ஒரு மாதம் கழித்து

ஒரு மாதம் கழித்து

ஆர்எஸ்எஸ் பயிற்சி முடிந்து சுமார் ஒரு மாதம் கழித்து ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு அப்துல் காலம் சென்றார். அங்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடம் அவர் கலந்துரையாடினார். இருப்பினும், முன்பு நடந்த குழப்பத்தால் அப்துல் காலம் ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்ற போது, அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் யாரும் அங்கு வரவில்லை.

English summary
Reason why Former president APJ Abdul Kalam had once cancelled his visit to the RSS headquarters: APJ Abdul Kalam in Nagpur RSS headquarters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X