Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கி எழுந்த ஹர்திக் படேல்.. அடுத்து "அந்த" கட்சிக்கு தான் செல்கிறாராம்! குழம்பி நிற்கும் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக மிகவும் வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று குஜராத். இங்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

பாஜக வலுவாக உள்ள மாநிலம் என்பதைத் தாண்டி பிரதமரின் சொந்த மாநிலம் என்பதால், இங்கு ஆட்சியைத் தக்க வைத்தே தீர வேண்டும் என பாஜக எண்ணுகிறது.

கடந்த 2017 தேர்தலில் பாஜகவுக்குக் காங்கிரஸ் கடும் போட்டியைக் கொடுத்தது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வென்றது.

 குஜராத்

குஜராத்


பாஜகவால் மூன்று இலக்கத்தில் வெல்ல முடியாமல் போனது. எனவே, இந்தாண்டு தேர்தலில் பாஜகவுக்குக் காங்கிரஸ் கடும் போட்டியைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அங்கு நடக்கும் செயல்கள் காங்கிரஸ் கட்சிக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. குஜராத்தின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

 ஹர்திக் படேல்

ஹர்திக் படேல்

28 வயதான ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளது அக்கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கட்சியில் 50% பொறுப்புகளை ஒதுக்கக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இருந்த போதிலும், கடந்த இரு ஆண்டுகளில் அக்கட்சியில் இருந்து விலகிய 5ஆவது தலைவராக ஹர்திக் படேல் உள்ளார். ஏற்கனவே, ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா, அசோக் தன்வார் மற்றும் சுஷ்மிதா தேவ் காங்கிரஸில் இருந்து விலகி உள்ளனர்.

கடிதம்

கடிதம்

இது குறித்து சோனியா காந்திக்கு ஹர்திக் படேல் எழுதிய கடிதத்தில், "நாடு தீர்வைக் கோரும் பல பிரச்சினைகளுக்குக் காங்கிரஸ் தடையாக இருந்தது. ஸ்ரீராமர் கோவில், குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆர்சி, சட்டப்பிரிவு 370, ஜிஎஸ்டி எனச் சொல்லிக் கொண்டே போகலாம். மத்திய அரசை எதிர்ப்பது என்று மட்டுமே காங்கிரஸின் நிலைப்பாடு சுருங்கிப்போனது. கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் மக்கள் காங்கிரஸை நிராகரித்தனர், ஏனென்றால் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எப்படி உதவும் என்பதை விளக்கத் தவறிவிட்டனர்" என்று தெரிவித்தார்.

 ராகுல் மீது அட்டாக்

ராகுல் மீது அட்டாக்

மேலும், ராகுல் காந்தியைக் கடுமையாகச் சாடிய அவர், "நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், மக்கள் மற்றும் கட்சி தொடர்பான விஷயங்களைக் கேட்பதை விட, மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவதில் தான் அவர் அதிக ஆர்வம் காட்டினார். நாடு கஷ்டத்தில் இருக்கும்போதெல்லாம், கட்சிக்கு அவர் தேவைப்பட்டபோதெல்லாம் அவர் வெளிநாட்டில் இருந்தார். அவர் குஜராத்திகளை வெறுக்கிறார் என்பதை உணரும் வகையில் அவர் குஜராத்தை நடத்தினார்" என்று சாடியிருந்தார்.

 யார் இந்த ஹர்திக்

யார் இந்த ஹர்திக்

கடந்த 2015ஆம் ஆண்டில், அப்போது 22 வயதே ஆன ஹர்திக் படேல், குஜராத்தில் உள்ள படேல் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடினார். ஹர்திக்கின் தலைமையின் கீழ் படேல் அனாமத் அந்தோலன் சமிதி (PAAS) நடத்திய போராட்டம், ஆளும் பாஜகவுக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 2017 தேர்தலில் பாஜகவால் 99 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து மார்ச் 2019இல், மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, ஹர்திக் படேல் காங்கிரஸில் சேர்ந்தார். அவர் உடனடியாக குஜராத்தின் செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இது இளைஞர்கள் மற்றும் படேல் சமூகத்தினர் மத்தியில் காங்கிரசை வளர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 நிராகரிப்பு

நிராகரிப்பு

இருப்பினும் ஹர்திக் படேலால் காங்கிரஸ் கட்சியில் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. தன்னை குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இருப்பினும், 2021 டிசம்பரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜகதீஷ் தாக்கூர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல வரும் குஜராத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்த வேண்டும் என்ற ஹர்திக்கின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. எல்லாவற்றையும் விடக் கடந்த மே 12இல் தாஹோதில் ராகுல் காந்தி கலந்து கொண்ட விழாவில் ஹர்திக் படேலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை..

 குறையும் செல்வாக்கு

குறையும் செல்வாக்கு

ஹர்திக்கின் செல்வாக்கு படேல் சமூகத்தில் கூட குறைந்து வருவதாகக் காங்கிரஸ் மேலிடத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் கட்சியைப் பலப்படுத்துவதை விட, முதல்வர் பதவிக்கு வருவதில் தான் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் இப்போது மோசமான நிலையில் இருப்பதால், கட்சியில் சேரும் வெளியாட்கள் அனைவரும் கட்சியை மிரட்ட முடியும் என்று நினைக்கிறார்கள்.. நாங்கள் நூற்றாண்டு பழமையான கட்சி. ஹர்திக் மிகவும் அவசரம் காட்டுகிறார்" என்றார்.

 காங்கிரஸ் பிளான்

காங்கிரஸ் பிளான்

இதில் இருந்தே காங்கிரஸ் ஹர்திக்கை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. ஹர்திக்கிற்கு மாற்றாகச் சுயேச்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானியை காங்கிரஸ் முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 2016ஆம் ஆண்டு உனாவில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த போராட்டத்தில் கவனம் பெற்றவர் ஜிக்னேஷ் மேவானி. வரும் தேர்தலில் அவர் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு மிக அதிகம். ஏற்கனவே, அவர் கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணமும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 ஹர்திக் திட்டம்

ஹர்திக் திட்டம்

ஹர்திக் தனது அடுத்த மூவ்வை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், அவரது கடிதத்தைப் பார்க்கும் போது, அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. இதற்கேற்றார் போல பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக அரசு, 2015-ல் ஹர்திக் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறும் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது. அதேபோல ஆம் ஆத்மி கட்சிக்கும் குஜராத்தில் பிரபலமான தலைவர் தேவைப்படுகிறார். புதிய கட்சியைத் தொடங்குவதும் ஒரு ஆப்ஷனாகவே உள்ளது. அவர் என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+