இரவோடு இரவாக டெல்லி பறந்த செந்தில் பாலாஜி.. சந்தித்தது யாரை தெரியுமா? வெளியான போட்டா! பரபர பின்னணி
சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் நேற்று அவசரஅவசரமாக அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இன்று காலையில் அவர் சென்னை வந்தார். இரவோடு இரவாக செந்தில் பாலாஜி டெல்லி பறந்து உடனடியாக சென்னை திரும்பிய நிலையில் அவர் யாரை சந்தித்துள்ளார்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை செந்தில் பாலாஜி நிர்வகித்து வருகிறார்.
கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் இந்த சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனை பற்றி அமலாக்கத்துறை தரப்பில், தமிழ்நாடு டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செந்தில் பாலாஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விவகாரத்தை பாஜக தீவிரமாக கையில் எடுத்துள்ளது. தமிழக அரசு மற்றும் செந்தில் பாலாஜிக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக சார்பில் சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அண்ணாமலை உள்பட பல பாஜக தலைவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தான் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி அவசரஅவசரமாக சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்றைய தினம் சட்டசபை கூட்டம் முடிந்தவுடன் செந்தில் பாலாஜி டெல்லி புறப்பட்டார். அதன்பிறகு இன்று அதிகாலையில் அவர் விமானத்தில் சென்னை திரும்பி வந்தார். இந்த ஒருநாள் இரவில் டெல்லிக்கு செந்தில்பாலாஜி ஏன் சென்று வந்தார்? என்பது பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தன. செந்தில் பாலாஜியின் டெல்லி பயணம் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை. டாஸ்மாக் மீது ரூ.1,000 கோடி முறைகேடு புகாரை அமலாக்கத்துறை வைத்துள்ள நிலையில் அவர் ரகசியமாக சென்று வந்ததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் டெல்லி பயணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது செந்தில் பாலாஜி நேற்று டெல்லி சென்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹியை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக ஒரு போட்டோ வெளியாகி உள்ளது. அந்த போட்டோவில் முகுல் ரோத்தஹிக்கு செந்தில் பாலாஜி சால்வை போட்டு அருகில் நிற்கிறார்.
செந்தில் பாலாஜி வழக்கில் முகுல் ரோத்தஹி தான் வாதாடி வரும் நிலையில் அதுதொடர்பாக செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைக்கோரி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications