ஏன் ஓட்டுப் போடலை? மாஜி மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பிய பாஜக!
டெல்லி: 5-வது கட்ட லோக்சபா தேர்தலில் வாக்காளிக்காதது ஏன் என கேள்வி கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா எம்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாஜக.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா. வாஜ்பாய்- அத்வானி காலத்தில் பாஜகவின் சீனியர்களில் ஒருவராக இருந்தவர். பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக பதவி வகித்தார். 1998, 1999, 2009 லோக்சபா தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். 1998-ம் ஆண்டு நாட்டின் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். பாஜகவின் தேசியத் துணைத் தலைவராக இருந்த நிலையில் 2018-ம் ஆண்டு பாஜகவை விட்டே வெளியேறினார் யஷ்வந்த் சின்ஹா.

2021-ம் ஆண்டு மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியின் துணைத் தலைவரானார். 2022-ம் ஆண்டு எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறக்கப்பட்டார் யஷ்வந்த் சின்ஹா. அத்தேர்தலில் 35.97% வாக்குகளை மட்டும் பெற்று தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தோற்றார் யஷ்வந்த் சின்ஹா.
யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹாவும் பாஜகவில் இருந்தார். 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் யஷ்வந்த் சின்ஹா வென்ற அதே ஹசாரிபாக் தொகுதியின் எம்பியானார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றார். சில மாதங்களுக்கு முன்னர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜெயந்த் சின்ஹா, பருவநிலை மாற்றம், சூழல் மேம்பாடு குறித்த பணிகளில் கவனம் செலுத்துவேன் என அறிவித்தார்.
தற்போதைய லோக்சபா தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் ஜெயந்த் சின்ஹாவுக்கு போட்டியிட வாய்ப்புதரப்படவில்லை. இந்நிலையில் சில நாட்களில் ஜெயந்த் சின்ஹா மகன் ஆஷிஸ் சின்ஹா, "இந்தியா" கூட்டணியில் பேரணியில் பங்கேற்றார். மேலும் காங்கிரஸில் ஆஷிஸ் சின்ஹா இணைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
லோக்சபா தேர்தலின் 5-வது கட்ட தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில பாஜக, மாஜி மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில், தேர்தல் பணிகளிலும் முழுமையாக ஈடுபடவில்லை. நேற்றைய வாக்குப் பதிவின் போது வாக்களிக்கவும் செல்லவில்லை. இதற்கான காரணங்களை 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்காததால் முன்னாள் மத்திய அமைச்சருக்கு பாஜக நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications