புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடர்.. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்..!
டெல்லி: நடப்பு ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் டெல்லியில் கட்டப்பட்டு வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை, அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கான அலுவலகங்கள், கூட்ட அரங்குகள், உணவு கூடங்கள் என ஏராளமான வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

2022ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என கட்டுமான பணிகள் தொடங்கியது முதல் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை புதிய நாடாளுமன்றத்துக்கு மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசுக்கு இது முக்கிய சாதனையாக பார்க்கப்படும்.
இதற்கான கட்டுமான பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது. இதன் முன்னேற்றப் பணிகள் ஒவ்வொரு வாரமும் ஒப்பந்தகாரர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் இருக்கைகள், மேசைகள் எல்லாம் வெவ்வேறு இடங்களில் தயாராகி வருகின்றன. பணிகளை முடிப்பதில் உள்ள சிரமத்தை நீக்க தீவிர ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நடப்பு ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இந்தியாவின் நம்பிக்கையை வெளிப்படுத்தும். பழைய கட்டடத்துடன் ஒப்பிட்டால் தொழிற்நுட்ப ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியிலும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நவீனமாக இருக்கிறது. குளிர்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த முயற்சித்து வருகிறோம்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட கட்டிட பணிகள் ஒருவாரம் மட்டுமே பின்தங்கியிருக்கிறது. அதுவும் விரைவில் சரி செய்யப்படும். கட்டிடத்தின் கூம்பு கட்டுமான பணி அடுத்து வரும் 10, 15 நாட்களில் முடிந்துவிடும். முழுமையான பணிகள் முடிந்து வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி கட்டிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications