டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'சான்ஸே இல்லை' .. 'காந்தி' குடும்பம் இல்லாமல் காங்கிரஸா? - முக்கியத் தலைவர்கள் சொல்வது என்ன?

By
Google Oneindia Tamil News

டெல்லி: 'காந்தி' குடும்பம் இல்லாத காங்கிரஸ் கட்சியை நினைத்துகூட பார்க்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.ஷிவகுமார் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்கி, ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

நகைச்சுவை நட்சத்திரம் டூ பஞ்சாப் முதல்வர்.. ஆம் ஆத்மி பகவந்த் மான் முன் இருக்கும் 3 பெரிய சவால்கள்! நகைச்சுவை நட்சத்திரம் டூ பஞ்சாப் முதல்வர்.. ஆம் ஆத்மி பகவந்த் மான் முன் இருக்கும் 3 பெரிய சவால்கள்!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைமை சரியில்லாததால் தான் இந்த தோல்வி என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஷிவகுமார்

ஷிவகுமார்

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இதுகுறித்து கூறுகையில், ''காங்கிரஸ் தொண்டர்களை காந்தி குடும்பம் இல்லாமல் ஒன்றினைக்க முடியாது. காந்தி குடும்பம் தான் கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்கிறது. இந்த கட்சியின் தூண்கள் காந்தி குடும்பத்தினர். அவர்கள் இல்லாமல் காங்கிரஸ் கட்சி நடத்துவது கஷ்டமான காரியம்.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில், பிரியங்கா காந்தி மிகக்கடுமையாக பிரசாரம் செய்தார். கட்சி வெற்றிபெற அதிக உழைப்பைக் கொடுத்தார். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. இந்த மக்களுக்கு எங்களை புரியவில்லை. அவர்களுக்கு இந்த தேர்தலில் புரியவைக்க முயற்சி செய்தோம். ஆனாலும் தோற்றுவிட்டோம்.

காந்தி குடும்பம்

காந்தி குடும்பம்

கட்சிக்குள்ளேயே போட்டி பொறாமை இருக்கிறது. பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கட்சியை விட்டு போகலாம். சொந்த பலனுக்காக கட்சயில் இருந்தால் சென்றுவிடுங்கள். எங்களுக்கு அதிகாரத்தில் நம்பிக்கை இல்லை. நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நேர்மையாக இருக்கிறோம். காங்கிரஸின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். எப்போதும் காந்தி குடும்பத்தின் பக்கம் நிற்போம்'' என்று கூறியுள்ளார்.

ஜி 23

ஜி 23

காங்கிரஸின் 23 தலைவர்களைக் கொண்ட குழு (ஜி-23) சோனியா காந்திக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற வாரியத்திற்கான தேர்தல்கள் உட்பட பல அமைப்பு சீர்திருத்தங்களை வலியுறுத்தி 2020ல் கடிதம் எழுதியிருந்தனர். இந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் இந்த தோல்வி என காங்கிரஸ் கட்சியினரே தெரிவிக்கின்றனர்.

English summary
Karnataka Congress senior leader DK Shivakumar has said that he cannot even think of a Congress party without a 'Gandhi' family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X