அடங்காத கொரோனா.. ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு.. ஓமிக்ரானால் அடுத்த அலை?
டெல்லி: உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல உயரும் நிலையில், ஒரே நாளில் லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது..
இப்படி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் வரை எதுவும் இதற்கு தப்பவில்லை.

கொரோனா பாதிப்பு
இப்போது ஓமிக்ரான் கொரோனா, குறிப்பாக BA4 மற்றும் BA வகை கொரோனா தான் உலகெங்கும் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 3.10 லட்சம் பேர் கொரோனாவால் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 535,759,397ஆக அதிகரித்துள்ளது. அதேபோல ஒரே நாளில் 447,966 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

எந்த நாடுகள்
உலகளவில் தற்போது அதிக தினசரி கேஸ்களை கொண்ட நாடுகள் பட்டியலில் வடகொரியா முதலில் உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 66 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தைவானில் 53 ஆயிரம் பேருக்கும் அமெரிக்காவில் 51 ஆயிரம் பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
வளர்ந்த வல்லரசு நாடுகளில் வேக்சின் பணிகள் கிட்டதட்ட முடியும் நிலையில் உள்ளது. அதேபோல வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளிலும் வேக்சின் பணிகள் வேகமாகவே நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனா உயிரிழப்புகள் முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. உலகளவில் நேற்று ஒரே நாளில் 689 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக தைவான் நாட்டில் 151 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல அமெரிக்காவில் 108 பேரும் இத்தாலியில் 70 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ரஷ்யா (64) பிரேசில் (50) நாடுகளில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

என்ன காரணம்
சில குறிப்பிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு மெல்ல வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதற்கு உருமாறிய ஓமிக்ரான் BA5 வகை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது முந்தைய கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் இது பெரும்பாலும் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவம் என்பது ஒரு நல்ல விஷயமாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications