அன்னை தமிழகத்தின் ஆண் தெரசாக்கள்! பசியில்லா தேசம் படைக்கும் இளைஞர்கள்! அந்த மனசு தான் சார் கடவுள்!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளைஞர்கள் பசியில்லா நத்தம் என்ற அமைப்பை உருவாக்கி ஆதரவற்றவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருவதோடு, அலங்கோலமாக உள்ள நபர்களை நல்ல மனிதனாக்கி மக்கள் மத்தியில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவாக இருந்தாலும் ஆண்டிபட்டியாக இருந்தாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஆதரவற்றோரும் அரவணைக்க யாரும் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு வறுமையின் பிடியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் அவர்களை அரவணைக்க ஒவ்வொரு நாளும் அன்னை தெரசாக்கள் தோன்றி கொண்டு தான் இருக்கிறார்கள்.அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பசியில்லா நத்தம் என்ற அமைப்பை ஆரம்பித்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்குவதோடு ஆதரவற்றவர்களுக்கு வீடுகளும் கட்டிக் கொடுத்து வருகின்றனர்.

பசியில்லா நத்தம் இளைஞர்கள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மதுசூதணன், தனது நண்பர்களுடன் இணைந்து பசியில்லா நத்தம் என்ற அமைப்பைத் தொடங்கி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர். இவர்கள் நத்தம், கோபால்பட்டி, திண்டுக்கல் பகுதிகளில் வாரிசுகளால் கைவிடப்பட்ட முதியவர்கள், நோய் வாய்ப்பட்டோர், மனநலம் பாதிக்கப்பட்டோரை அடையாளம் கண்டு கணக்கெடுத்தனர்.

ஆதரவற்றவர்களுக்கு உதவி
இதைத் தொடர்ந்து தினமும் 30 முதல் 40 பேருக்கு உணவு பாக்கெட்கள், தண்ணீர் கேன்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வழங்கி வருகின்றனர். இந்த சேவையை கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மேலாக, இயலாதோருக்கு உதவிடும் லட்சியமாக செய்கின்றனர்.

மனநலம் குன்றிய மக்கள்
மனநலம் குன்றி ஆண்டுக்கணக்கில் குளிக்காமல், முடி வெட்டாமல் பராமரிப்பின்றி அலங்கோலமாக இருப்போரையும் குளிக்க வைத்து, தலைமுடி வெட்டி, முகச்சவரம் செய்து நல்ல உடை, போர்வை, காலணி போன்றவற்றை வழங்கி உதவுகின்றனர்.

மக்கள் பாராட்டு
இந்த சேவையை 'பசியில்லா நத்தம்' என்ற முகநுால் மற்றும் வாட்ஸப் பக்கத்தில் பதிவிடுவதால், அதை பார்க்கும் பலரும் இவர்களை தொடர்பு கொண்டு பொருள், உடைகள் தந்து உதவுகின்றனர். இவர்களது குடும்பத்தினரும் இப்பணிக்கு ஆதரவுக்கரம் தருவதால் இயலாதவர்களுக்கான சேவை தொய்வின்றி நடக்கிறது. சாதாரண மனநிலையில் இருப்பவர்கள் சுயமாக சம்பாதித்து தன் தேவையை பூர்த்தி செய்ய முடியும். பிச்சை எடுப்பவர் அதன் மூலம் தனது வயிற்றுப்பசியை போக்கி கொள்வர். ஆனால் மனநலம் குன்றியவருக்கு பிச்சை எடுக்கக்கூட தெரிவதில்லை.

10 ரூபாய்க்கு உணவு
இதனைக் கண்டு வேதனையடைந்து தான் இவர்கள் இந்த சேவையை தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு சொந்த இடத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு நல்லுள்ளம் கொண்டோரின் உதவிகள் மூலம் வீடுகள் கட்டித் தருகின்றனர்.

மக்களின் கடமை
மேலும் திண்டுக்கல் நத்தம் உள்ளிட்ட பகுதிகளை ஐந்து ரூபாய், பத்து ரூபாய் உணவகங்கள் ஆரம்பித்து ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கியும் வருகின்றனர் இவர்களின் சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகளை வழங்கி வந்தாலும் அதனை ஏற்காமல் மக்கள் சேவையே பெரிய விருது என பணியாற்றி வரும் இந்த இளைஞர்களை பாராட்ட வேண்டியது அனைவரின் கடமை.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications