தள்ளுவண்டி கடையில் செட்டில் ஆன செந்தில்குமார்! அட நம்ம பழனி எம்.எல்.ஏ.வா இது? அசந்து போன மக்கள்..!
திண்டுக்கல் : தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும், தற்போது திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் சாலையோர தள்ளுவண்டிக் கடை உணவகத்தில் தொண்டர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட புகைப்படங்களை பகிர்ந்து எங்க எம்.எல்.ஏ. எவ்வளவு சிம்பிள் பாருங்களேன் என கொண்டாடி வருகின்றனர்.
அதிமுகவை பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், மருதராஜ் என மாறி மாறி மாவட்ட செயலாளர்கள் இருந்தாலும். இவர்தான் அதிமுக என்று யாரையும் சொல்ல முடியாது. பொதுவாகவே தமிழகம் முழுவதும் அதிமுகவில் நிலைமை அப்படித்தான் உள்ளது.
ஆனால் திமுகவை பொருத்தவரை தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் வைத்தது தான் சட்டம் என்ற அளவுக்கு பல ஆண்டு காலம் நிர்வாகிகள் கோலோச்சி வருகின்றனர். துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஐ.பெரியசாமி
அந்த வகையில் தென் மாவட்டங்களில் திமுகவின் முக்கிய முகமாக வளம் வருபவர் ஐ.பெரியசாமி. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த அவர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார். ஆத்தூர் தொகுதியில் ஆழமாக வேரூன்றி உள்ள அவர் திமுக ஆட்சி காலங்களில் முப்பெரும் துறை அமைச்சராகவும் பதவி வைத்துள்ளார். தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் அவரது மகன் ஐ.பி.செந்தில்குமாரும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

ஐ.பி.செந்தில்குமார்
திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும், மாநில இளைஞரணி துணைச் செயலாளராகவும் பதவி வகித்த அவர் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருந்தும் விடாமல் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் பழனி தொகுதியிலேயே போட்டியிட்ட அவர் முதன் முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார், அதன் பிறகு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

பழனி எம்.எல்.ஏ
அவரது தந்தை மாநில அளவிலான பொறுப்புக்கு சென்றதை எடுத்து திண்டுக்கல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்டம் ஐபி செந்தில்குமார் வசமாகவும் மேற்கு மாவட்டம் மூத்த சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி வசம் சென்றது. பொதுவாக பழனித்தொகுதியில் ஒரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அடுத்த முறை வென்றதில்லை என்ற சென்டிமென்டை உடைத்து மூன்றாவது முறையாக பழனியில் போட்டியிட்ட அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

இளைஞர்கள் செல்வாக்கு
இதன் மூலம் பழனி சட்டமன்ற தொகுதியில் நிலவி வந்த சென்டிமென்ட்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தன்னை எதிர்த்துப் போட்டுவிட்ட ரவி மனோகரனை விட சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஐபிஎஸ் செந்தில்குமார் தொடர்ந்து தனது தொகுதி மட்டுமல்லாமல் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திலும் சூறாவளியாக சுற்றி சுழன்று வரும் அவருக்கு இளைஞர்கள் செல்வாக்கு எப்போதுமே அதிகம்.

இளைஞரணி நிர்வாகிகள் ஆதரவு
குறிப்பாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆதரவு எப்போதுமே ஐபி செந்தில்குமாருக்கு தான். அவரை சுற்றி நூற்றுக்கணக்கான இளைஞர் அணி நிர்வாகிகள் வளம் வருவது வழக்கம் இந்த நிலையில் தற்போது ஐபி செந்தில் குமாரை தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர் திண்டுக்கல் உடன்பிறப்புகள் காரணம் தற்போது முகநூலில் வெளியாகியிருக்கும் ஒரு புகைப்படம் தான்.

தள்ளுவண்டி கடையில் உணவு
நேற்று இரவு திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் திமுகவினுடன் காரில் சென்று கொண்டிருந்த செந்தில் குமார் சாலையோர உணவகத்தை பார்த்ததும் வண்டியை நிறுத்தி அங்கு சென்று இரவு உணவு அருந்தினார். அப்போது அவருடன் திமுக நிர்வாகிகளும் அமர்ந்து இட்லி தோசை உள்ளிட்ட உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டனர். இதனால் அங்கிருந்த உணவக உரிமையாளர் அதிர்ச்சி அடைந்ததோடு சாப்பிட வந்த மற்ற மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். மேலும் எங்க எம்எல்ஏ எவ்வளவு சிம்பிளாக இருக்கிறார் பாருங்கள் என புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவி விட்டு வருகின்றனர் உடன்பிறப்புகள்.
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
சம்பந்திக்காக சேராத இடம் சேர்ந்து.. வஞ்சத்தில் வீழ்ந்த எடப்பாடி! வஞ்சகன் மோடி! முத்தரசன் அட்டாக்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications