இதய பிரச்சனையால்.. உயிருக்கு போராடும் ஒன்றரை வயது சிறுவன்! நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன் லத்திக், பிறந்தது முதல் இதய பிரச்சனையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறான். தற்போது சிறுவனின் நிலை மோசமடைந்திருக்கிறது. உயிருக்கா தற்போது சிறுவன் போராடி வருகிறான். நீங்கள் நினைத்தால் இந்த பிஞ்சு உயிரை காப்பாற்ற முடியும்.
சிறுவன் லத்திக் ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோது, கடும் காய்ச்சல், தீவிர வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டான். உள்ளூர் கிளினிக்கில் வைத்து சிகிச்சை அளித்து பார்த்திருக்கிறார்கள் பெற்றோர். ஆனால், சிகிச்சை பலனளிக்கவில்லை. பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்ததில் சிறுவனுக்கு இதயத்தில் தீவிரப் பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பின், லத்திக்குக்கு 'டெட்ரலஜி ஆஃப் ஃபாலோட்' எனும் இதயக் குறைபாடு உறுதி செய்யப்பட்டு, சென்னைக்குச் சென்று மேல் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது.
குழப்பத்திற்கும், பயத்திற்கும் மத்தியில், ஒரு குடும்ப நண்பரின் வழிகாட்டுதலுடன் பெற்றோர், சென்னை MIOT மருத்துவமனையை அடைந்தனர். அங்கிருந்த குழந்தை இருதய சிகிச்சை நிபுணர்கள், லத்திக்குக்கு உடனடியாக உள் இதய அறுவை சிகிச்சை (intracardiac repair surgery) தேவை என்று கூறியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சைதான் லத்திக் உயிர் பிழைக்க இருக்கும் ஒரே வாய்ப்பு. இது செய்யப்படாவிட்டால், சிறுவனின் இதயம் கொஞ்சம், கொஞ்சமாக பலவீனமடைந்து, உயிர் பிழைப்பது கஷ்டமாகிவிடும். ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ. 3,50,000 செலவாகும். இந்த தொகை சிறுவனின் பெற்றோருக்கு மிகப்பெரியது. அவர்களால் தனியாக இந்த தொகையை திரட்ட முடியாது.

சிறுவனின் தந்தை சிவகுரு, சூப்பர் மார்க்கெட்டில் மாதம் ரூ. 15,000 சம்பாத்தியத்திற்கு வேலைக்கு சென்றுக்கொண்டிருக்கிறார். மொத்த குடும்பத்திற்கும் இந்த சொற்ப வருமானம்தான் இருக்கிறது. இதை வைத்து குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே அறுவை சிகிச்சைக்கான தொகையை ஏற்பாடு செய்ய இயலாமல், குடும்பம் மனதளவில் மிகவும் நொறுங்கி போய் உள்ளது. சிறுவன் வலியால் துடிப்பதைக் காணும் அவர்கள், நம்மை போன்றவர்கள் யாரேனும் உதவுவோம் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த குடும்பத்துடன் நாம் துணை நிற்போம். நம் ஒவ்வொருவரின்பங்களிப்பு, சிறு தொகையாக இருந்தாலும், சிறுவனின் உயிரை காப்பாற்றும். சிறுவன் வளரவும், விளையாடவும், பள்ளிக்குச் செல்லவும், அவனுக்கான வாழ்க்கையை அவன் வாழவும் ஒரு பொன்னான வாய்ப்பை நம்மால் உருவாக்க முடியும். ஒன்றிணைவோம், சிறுவனின் உயிரை காப்பாற்றி அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எனும் விளக்கை ஏற்றுவோம். அதற்காக நம்மால் முடிந்த உதவியை இன்றே செய்வோம்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications