கொடைக்கானல் காட்டேஜில் நடிகையின் அப்பாவுக்கு என்னாச்சு? திண்டுக்கல் பங்களாவில் அவரா? சிக்கியது க்ளூ
திண்டுக்கல்: கொடைக்கானலில் நடிகர் சூர்யாவின் 'மாயாவி' படத்தில் நடித்த துணை நடிகை விஷ்ணுப்பிரியாவின் அப்பா, மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இது குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வரும் நிலையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சூரிய நாராயணன்... 74 வயதாகிறது.. இவரது மகள் விஷ்ணுப்பிரியா தமிழில் சூர்யா நடித்த 'மாயாவி' உள்ளிட்ட படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் துணை நடிகையாக பணியாற்றியுள்ளார்..

சூரிய நாராயணனுக்கு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே ஒரு சொந்த பங்களா உள்ளது.. இந்த பங்களாவை அவர் முறையாக அனுமதி பெறாமல், சுற்றுலா பயணிகளுக்கு காட்டேஜ்ஜாக வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.. அந்த பங்களாவில் கொடைக்கானலை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த முரளி ஆகிய 2 பேரும் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்..
பங்களாவில் நடந்தது என்ன?
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சுற்றுலாப் பயணிகள் போல அந்த பங்களாவிற்கு வந்து ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.. நேற்று முன்தினம் இரவு, அந்த மர்ம நபர்கள், முதலில் பங்களா ஊழியர்களான ஆறுமுகம் மற்றும் முரளி ஆகியோரைத் தாக்கி, துணிகளால் கை, கால்களைக் கட்டிப் போட்டனர்..
அதன்பிறகு சூரிய நாராயணனை ஒரு சேரில் உட்கார வைத்து, அவரது முகம் மற்றும் உடல் முழுவதையும் பிளாஸ்திரி மூலம் சுற்றி பலமாக ஒட்டியுள்ளனர்.. வாய் மற்றும் மூக்குப் பகுதிகளில் டேப் சுற்றப்பட்டதால், மூச்சு விட முடியாமல் திணறிய சூரிய நாராயணன் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்..
கொள்ளை மற்றும் தப்பியோட்டம்
சூரிய நாராயணன் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் செல்போன்களை திருடிக்கொண்டனர்.. தாங்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்ததோடு, கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து மாயமாகினர்..
நீண்ட போராட்டத்திற்கு பிறகு பங்களா ஊழியர் ஆறுமுகம் தனது கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு வெளியே வந்து கூச்சலிட்டார்.. அவரது சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கொடைக்கானல் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்..
போலீஸ் ஆரம்பித்த விசாரணை
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூரிய நாராயணனின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. தேனி எஸ்.பி (பொறுப்பு) சினேகப்பிரியா மற்றும் டி.எஸ்.பி யுவபிரியா ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்..
இந்தக் கொலையில் ஒரு முக்கிய திருப்பமாக, கடந்த 2018-ம் ஆண்டு நடிகை விஷ்ணுப்பிரியாவின் காதலர் கொல்லப்பட்ட வழக்கில் சூரிய நாராயணன் ஒரு நபராக சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.. எனவே, இது பழைய முன்விரோதத்தால் நடந்த கொலையா அல்லது வெறும் நகைக்காக நடந்த கொலையா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்..
இந்தக் கொலை வழக்கில் துப்பு துலக்க திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் தற்போது 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது..
சிசிடிவி ஹார்டு டிஸ்க்
பங்களாவில் இருந்த சிசிடிவி ஹார்டு டிஸ்க்கை கொலையாளிகள் எடுத்துச் சென்றதால், கொடைக்கானல் மலைப்பாதை மற்றும் நகரின் நுழைவு வாயில்களில் உள்ள மற்ற தனியார் விடுதிகளின் கேமரா பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்..
மேலும், சம்பவத்தின் போது அந்தப் பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்களை வைத்து, மர்ம நபர்கள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதனிடையே, கொலையாளிகள் அண்டை மாநிலங்களுக்கு தப்பி சென்றிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளதால், கேரளா மற்றும் ஆந்திரா எல்லைகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. எப்படியும் இன்றைய தினம் கொலையாளிகளை பிடித்துவிடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...!!
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications