மலரே குறிஞ்சி மலரே! முதலமைச்சருக்கு திண்டுக்கல் கலெக்டர் அளித்த ஓவியம்! ருசிகர பின்னணி!
திண்டுக்கல்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் குறிஞ்சி மலர் ஓவியம் ஒன்றை நினைவுப்பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார்.
Recommended Video
சரி இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது எனக் கேட்கத் தோன்றுகிறதா. ஆம் இந்த நினைவுச்சின்னத்தை பொறுத்தவரை பல்வேறு ருசிகர பின்னணி தகவல்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் குறிஞ்சி மலர் என்றாலும் கூட முதல்வர் ஸ்டாலின் முதன்முதலில் நடித்த சின்னத்திரை தொடரின் பெயரும் குறிஞ்சி மலர் தான். இதனால் குறிஞ்சி மலர் என்பது முதல்வரின் நீங்காத நினைவுகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

திண்டுக்கல் பயணம்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நேற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்து அரசின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் சென்னை புறப்படுவதற்கு முன்னர் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் குறிஞ்சி மலர் ஓவியம் ஒன்று நினைவுப்பரிசாக முதல்வருக்கு வழங்கப்பட்டது.

முதல்வர் மகிழ்ச்சி
தனக்கு கொடுக்கப்பட்ட குறிஞ்சி மலர் ஓவியத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி கொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதனிடையே குறிஞ்சி மலர் ஓவியம் கொடுக்கப்பட்டதில் அப்படி என்ன ருசிகரம் இருக்கிறது என நீங்கள் வினவுவது புரிகிறது. அதவாது அந்தக் காலத்தில் மக்கள் மத்தியில் தமது முகத்தை பதிய வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நடித்த முதல் தொலைக்காட்சி நாடகத்தின் பெயரும் குறிஞ்சி மலர் தான்.

குறிஞ்சி மலர்
இதனால் குறிஞ்சி மலர் என்பதை பொறுத்தவரை முதல்வரால் எந்நாளும் மறக்க முடியாத ஒன்றாகும். அத்தகைய குறிஞ்சி மலர் ஓவியத்தை முதலமைச்சருக்கு கொடுத்து அசத்தியிருக்கிறார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர். கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூத்துக் குலுங்கக் கூடிய மலர் குறிஞ்சி மலர்.

சங்ககால இலக்கியங்கள்
இதனிடையே சங்ககால இலக்கியங்கள் பலவற்றிலும் குறிஞ்சி மலர் குறித்து குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக குறிஞ்சி மலர் செடிகள் அருகி வருவதும் கவனிக்கத்தக்கது. தோட்டக்கலைத்துறையோ வனத்துறையோ இது தொடர்பாக கவனத்தில் கொண்டு அருகி வரும் குறிஞ்சி பூ செடிகளை மீண்டும் தழைத்தோங்க செய்ய வேண்டியது அவசியமாகும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications