தோனி வந்ததும் அடியோடு மாறிய சூழ்நிலை.. இந்திய அணியில் ஏகப்பட்ட பாசிட்டிவிட்டி.. இதை நோட் பண்ணீங்களா?
துபாய்: 2021 டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இதுவரை இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் வென்று இருக்கிறது. இந்த பயிற்சி ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ஆடிய விதம், வீரர்களின் பார்ம் என்று பல விஷயங்கள் இந்திய அணிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.
Recommended Video
2021 ஐபிஎல் தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வரும் ஞாயிற்றுகிழமை நடக்க உள்ளது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அது அனல் பறக்கும். அதிலும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான டி 20 உலகக் கோப்பை போட்டி என்றால் கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்று இரண்டு பெரிய அணிகளை டி 20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வீழ்த்திவிட்டு நம்பிக்கையாக முதல் போட்டியை எதிர்கொள்ள உள்ளது. இந்த இரண்டு வெற்றிகள் இந்தியா அணிக்கு பல பாசிட்டிவ் விஷயங்களை கொடுத்துள்ளது.. என்னென்ன என்று பார்க்கலாம்!

ஓப்பனிங்
இந்திய அணியின் ஓப்பனிங் மிக சிறப்பாக உள்ளது. கே. எல் ராகுல் ஐபிஎல் போட்டிகளில் இருந்த பார்மை தக்க வைத்து உள்ளார். அவர் சிறப்பான பேட்டிங் செய்து கொண்டு இருக்கிறார். மிக முக்கியமாக ஐபிஎல்லில் அவர் ஸ்டிரைக் ரேட் குறைவாக இருந்தது. ஆனால் இந்த முறை ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தி தன் மீது இருந்த ஒரே ஒரு விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். இன்னொரு பக்கம் இஷான் கிஷான் மும்பை அணியின் கடைசி லீக் ஆட்டத்தில் இருந்த அதே பார்மை தக்க வைத்துள்ளார்.

கடைசி லீக் ஆட்டம்
மும்பை அணியின் கடைசி லீக் ஆட்டத்தில் இஷான் கிஷானின் சரவெடி ஆட்டம் தற்போது டி 20 உலகக் கோப்பை போட்டியிலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இவர் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவு என்றாலும் பேக் அப் ஓப்பனர் அல்லது வாய்ப்பு இருந்தால் ஒன் டவுன் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது போக மிடில் ஆர்டரில் கொஞ்சம் திணறிக்கொண்டு இருந்த சூர்யா குமார் யாதவும் பார்மிற்கு திரும்பி உள்ளார்.

கோலி
கோலி மட்டும்தான் கொஞ்சம் பேட்டிங்கில் திணறினாலும், அவர் பார்மிற்கு திரும்பும் காலம் ரொம்ப தூரம் இல்லை என்றே தோன்றுகிறது. மற்றபடி பண்ட், ஜடேஜா எப்போதும் போல பார்மில் உள்ளனர். இன்னொரு பக்கம் பயிற்சி ஆட்டங்களில் அதிகம் கவர்ந்தது என்றால் அது இந்திய அணியின் பவுலிங் யூனிட்தான். இந்திய அணியின் பவுலர் அஸ்வின் நேற்று இரண்டு விக்கெட் எடுத்து அசத்தல் பார்மிற்கு திரும்பி உள்ளார். இன்னொரு பக்கம் புவனேஷ்வர் குமாரும் டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்து நம்பிக்கை அளித்துள்ளார். ஜடேஜாவும் பேட்டிங் மட்டுமின்றி நேற்று பவுலிங்கும் சிறப்பாக செய்தார்.

வருண்
ஏற்கனவே வருண், பும்ரா, ஷமி நல்ல பார்மில்தான் இருக்கிறார்கள். இதில் பவுலிங், பேட்டிங் இரண்டிலும் ஏமாற்றம் அளித்தது ஹர்திக் பாண்டியாதான். இவர் பவுலிங் செய்யவில்லை. அதேபோல் பேட்டிங்கும் பெரிதாக இல்லை. நேற்று போட்டியை சிக்ஸ் அடித்து இவர் பினிஷ் செய்தது கண்டிப்பாக அவருக்கு மனரீதியாக ஒரு நம்பிக்கையை கொடுத்து இருக்கும். இவரும் விரைவில் பார்மிற்கு திரும்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பார்ம்
இதெல்லாம் போக தோனி வந்த பின் இந்திய அணியில் "கல்ச்சர்" நிறைய மாறியுள்ளது. அவர் ஆலோசகராக வந்த பின் அதிகம் பேச தொடங்கி உள்ளார். கேப்டனாக இருந்த போது அதிகம் பேசும் குணம் அவரிடம் கிடையாது. பண்ட், இஷானுக்கு சிறப்பு பயிற்சிகளை அவர் அளித்து வருகிறார். ஆட்டத்தின் போதும் கூட வீரர்களுக்கு இவர் தனியாக பயிற்சி அளித்து கொண்டு இருக்கிறார். தோனி இல்லாத சமயத்தில் இந்திய அணி என்றாலே வெறும் கோலி என்ற பிம்பம்தான் நிலவியது.

போகஸ்
ஆனால் அதை தோனி உடைத்துள்ளதாக தெரிகிறது. ஆட்ட வியூகங்களை கோலி, தோனி, சாஸ்திரி, ரோஹித் சேர்ந்துதான் வகுக்கிறார்கள். கோலி எங்குமே தனியாக தன்னிச்சையாக முடிவு எடுப்பதை போல தெரியவில்லை. நேற்று கூட ரோஹித் கேப்டன்சிக்கு கீழ் கோலி பவுலிங் போடும் அளவிற்கு அணியில் மாற்றம் ஏற்பட்டு இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அணியின் moralஐ தோனி உயர்த்திவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

கீப்பிங்
கீப்பர்களுக்கு தனி பயிற்சி கொடுப்பது. கேப்டனுக்கு வியூகங்களை வகுப்பதில் உதவி செய்வது. பக்கத்து அணியின் கேம்பிற்கு சென்று வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்ப்பது என்று தோனி முழு ஆலோசகராக உருவெடுத்துவிட்டார். இது கண்டிப்பாக இந்திய அணிக்கு உலகக் கோப்பை டி 20 தொடரில் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications