ஒரு கோடிப்பே.. புத்தாண்டில் 18 பேர் சாப்பிட்ட தொகை.. 'பில்' பகிர்ந்த உணவகம்.. மிரண்ட நெட்டிசன்கள்!
துபாய்: புத்தாண்டு தினத்தன்று துபாயின் புர்ஜ் கலிபா கட்டிடம் அருகே உள்ள உணவு விடுதி ஒன்றில் 18 நண்பர்கள் இணைந்து உணவு அருந்தியுள்ளனர். இவர்கள் சாப்பிட்டதற்கான தொகை மட்டும் இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடியை தாண்டியுள்ளது. இந்த பில் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் வியந்து போய் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டு முடிந்து 2023 ஆம் ஆண்டு கடந்த 1 ஆம் தேதி பிறந்தது. உலகம் முழுவதும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப புத்தாண்டை வரவேற்றதை காண முடிந்தது.
நண்பர்களுடன் ஜாலியாக கடற்கரையோரங்களுக்கு சென்று புத்தாண்டை வரவேற்று கொண்டாடுவது.. நட்சத்திர விடுதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பது என களை கட்டின புத்தாண்டு கொண்டாட்டங்கள். மேலும் சிலரோ நண்பர்களுடன் ஓட்டல்களுக்கு சென்று பிடித்த உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டு புத்தாண்டை வேற லெவலில் வரவேற்றனர்.

18 நண்பர்கள் இணைந்து
அந்த வகையில் துபாயின் புர்ஜ் கலிபா அருகே உள்ள ஒட்டல் ஒன்றில் நண்பர்களுடன் ஒருவர் புத்தாண்டிற்காக நண்பர்களுக்கு விருந்து அளித்து இருக்கிறார். 18 நண்பர்கள் இணைந்து சாப்பிட்டதற்கான செலவைக் கேட்டால் வாயடைத்து போய்விடுவீர்கள். ஆம் இந்திய மதிப்பில் 1.39 கோடி ரூபாய்க்கு 18 நண்பர்களும் சாப்பிட்டு இருக்கின்றனர். என்னாது.. 1.39 கோடி ரூபாய்க்கு ஓட்டலில் சாப்பிட்டார்களா என நீங்கள் புருவத்தை உயர்த்தி படிப்பது தெரிகிறது.. ஆம் இது உண்மைதான். இது குறித்த சுவாரசிய விவரத்த பார்ப்போம்.

துபாயில் கொண்டாட்டம்
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியதை போல துபாயிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. துபாயில் உள்ள உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ள பகுதிகளிலும் மக்கள் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினர். அங்குள்ள வீதிகள் இதனால் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புர்ஜ் கலீபா அருகே உள்ள ஒரு உணவகத்தில் தனது நண்பர்கள் 17 பேருடன் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட வந்துள்ளார்.புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால் உணவு வகைகளை ஒரு பிடி பிடித்து இருக்கின்றன. ஜூஸ் உள்பட வித விதமான உணவு வகைகளை சாப்பிட்டு இருக்கின்றனர்.

சுமார் ரூ.1.39 கோடி
இவர்கள் சாப்பிட்டதற்கான தொகையின் மொத்த மதிப்பு 6 லட்சத்து 20 ஆயிரத்து 926.61 திர்ஹாம் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.39 கோடி ஆகும். இந்த பில்லை உணவு விடுதியின் உரிமையாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், இது முதலும் இல்லை, முடிவும் இல்லை என்ற வாசகத்தையும் இணைத்து இன்ஸ்டாகிராமில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். உணவு விருந்து மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு வைத்திருக்கிறாரே..என்று நெட்டிசன்கள் பலரும் வியந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து
அண்மையில் அபுதாபியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் ஒருவர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.38 கோடிக்கு உணவு சாப்பிட்டது ( 6 லட்சத்து 15 ஆயிரத்து 65 திர்ஹாம்) குறித்த பில் சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிர்ந்து இருந்தது. உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத தங்கமுலாம் பூசப்பட்ட உணவுவகைகள் காரணமாக பில் தொகை இவ்வளவு அதிகமாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் சிலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications