என்ன இன்னும் சான்ஸ் இருக்கா?.. இந்திய அணிக்கு செமி பைனல் செல்லும் வாய்ப்பு உள்ளதா? - பின்னணி
துபாய்: உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் இந்திய அணிக்கு செமி பைனல் செல்லும் வாய்ப்பு கொஞ்சம் உள்ளது.
Recommended Video
உலகக் கோப்பை டி 20 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு குழுவிற்கு 6 அணிகள் என்று 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து மோதி வருகின்றன. பாகிஸ்தான், இங்கிலாந்து இதுவரை தங்கள் குழுக்களில் சிறப்பாக ஆடி உள்ளன.
இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளது. இது இந்திய அணிக்கு செமி செல்வதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

வாய்ப்பு
ஆனால் இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் இந்திய அணிக்கு செமி பைனல் செல்லும் வாய்ப்பு கொஞ்சம் உள்ளது. கொஞ்சம் திறமை + கொஞ்சம் அதிர்ஷ்டம் சாதகமாக இருந்தால் இந்திய அணி செமி பைனல் சென்றுவிடும். இந்தியா தற்போது உலகக் கோப்பை டி 2 தொடரின் குழு 2ல் உள்ளது. இதில் பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, நமிபியா, ஸ்காட்லாந்து அணிகள் உள்ளன.

வெற்றி
இதில் பாகிஸ்தான் ஏற்கனவே செமி பைனல் செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட பெற்றுவிட்டது. பாகிஸ்தான் வரிசையாக 3 போட்டிகளில் வென்றுவிட்டது. இதனால் அந்த அணிக்கு செமி பைனல் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் இரண்டாவது இடம் பிடிக்க போகும் அணி எது என்பதுதான் கேள்வியாக உள்ளது.

வெல்ல வேண்டும்
ஆப்கானிஸ்தான் இரண்டு வெற்றியுடன் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து ஒரு வெற்றியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியா இனி வெற்றிபெற வேண்டும் என்றால் வரிசையாக ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், நமிபியா அணிகளுடன் வெற்றிபெற வேண்டும். அதிலும் ஆப்கானிஸ்தான் அணியுடன் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.

தோல்வி
இன்னொரு பக்கம் நியூசிலாந்து அணி தனது மீதம் உள்ள 3 போட்டிகளில் ஒன்றில் தோல்வி அடைய வேண்டும். கடைசியில் இந்தியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து இடையே ரன் ரேட் அடிப்படையில் குவாலிபயர் தேர்வு செய்யப்படுவர். ஆப்கானிஸ்தான் அதிக ரன் ரேட் வைத்து இருப்பதால் அந்த அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்டம்
இதனால் இந்தியா இனி வரும் போட்டிகளில் பல விக்கெட்டுகள், அல்லது 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற வேண்டும். அப்போதுதான் ரன் ரேட்டில் ஆப்கானிஸ்தானை முந்த முடியும். நியூசிலாந்து ஒரு போட்டியில் மோசமாக தோல்வி அடைய வேண்டும். எனவே இந்திய அணிக்கு அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் மட்டுமே இந்திய அணிக்கு செமி பைனல் செல்லும் வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications