'இவங்கள தூக்கிட்டு.. அவங்கள கொண்டு வாங்க.. அதுதான் அணியை காப்பாற்ற ஒரே வழி.. 'கபில் தேவ் ஓப்பன் டாக்
துபாய்: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மோசமான பர்ஃபாமன்சிற்கு வணிக ரீதியில் அதிக அளவிலான போட்டிகள் நடைபெறுவது, குறிப்பாக ஐபிஎல் தொடரே முக்கிய காரணம் எனப் பலரும் சாடியுள்ளனர். இந்தச் சூழலில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், இந்திய அணி குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டிற்குத் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த அக். 23ஆம் தேதி முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பெரும் எதிர்பார்ப்புடன் இந்த உலகக் கோப்பை தொடரில் களமிறங்கியது

டி20 உலகக் கோப்பை
இதற்காக பலம் வாய்ந்த இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டது. போதாக்குறைக்குத் தல தோனியும் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மேலும், விராட் கோலியும் இதுதான் டி20 தான் கேப்டனாக இருக்கும் கடைசி தொடர் என அறிவித்துவிட்டார். இதனால் இந்திய அணியின் மீது வழக்கமான எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை கடந்த அக். 14ஆம் தேதி எதிர்கொண்டது.

பாகிஸ்தானிடம் தோல்வி
இதில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை குவித்தது. இந்திய அணியில் எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை. அடுத்துக் களமிறங்கிய பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் மிக எளிதாக 152 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்பது இதுவே முதல் முறையாகும்.

நியூசிலாந்து போட்டி
இந்தச் சூழலில் கடந்த அக். 31ஆம் தேதி நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் கேப்டன் விராட் கோலி வழக்கம் போல டாஸ் வெல்லத் தவறினார். நியூசிலாந்து அணியின் அட்டகாசமான பவுலிங்கில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக 7ஆவது ஓவரில் தொடங்கி 16ஆவது ஓவர் வரை இந்தியாவில் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை.

படுமோசம்
நியூசிலாந்தின் இந்த சூப்பர் பவுலிங் இந்தியாவின் ரன் ரேட்டை அப்படியே குறைத்தது. கடைசி ஓவர்களிலும் கூட இந்தியாவால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியாவால் 110 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து வந்த நியூசிலாந்து வீரர்கள் இந்திய பவுலிங்கை வெளுத்து வாங்கினர். வெறும் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நியூசிலாந்து அணி 111 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

அரையிறுதி போட்டி
தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்றதன் மூலம் இந்தியா கிட்டதட்ட அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்து வரும் போட்டிகளில் இந்தியா மிகப் பெரியளவில் வென்று, மற்ற போட்டிகளின் முடிவுகளும் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தால் மட்டுமே இந்தியாவால் அடுத்து சுற்றைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியும். இந்தச் சூழலில் தான் இந்தியா அட்டகாசமான பார்மில் இருக்கும் ஆப்கன் அணியை இன்று எதிர்கொள்கிறது.

என்ன காரணம்
அதேநேரம் இந்திய அணியின் தடுமாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக, வருவாயை மட்டும் குறியாக வைத்து, குறைந்த இடைவெளியில் அதிகளவிலான போட்டிகள் நடத்தப்படுவதால் வீரர்கள் ஓய்வின்றி விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகப் பலரும் விமர்சித்துள்ளனர். குறிப்பாக இந்திய அணியின் மோசமான பர்ஃபாமன்சிற்கு ஐபிஎல் தொடரே முக்கிய காரணம் எனப் பலரும் சாடியுள்ளனர். இந்தச் சூழலில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், இந்திய அணி குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

கபில் தேவ் கருத்து
மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலை இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், முக்கிய வீரர்களால் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டால், இளம் வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மற்ற அணிகளின் முடிவுகளை இந்தியா சார்ந்திருக்க வேண்டிய நிலை எப்போதும் இருக்கக் கூடாது. உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அது நமது பலத்தால் இருக்க வேண்டும். மற்ற அணிகளை நம்பாமல் இருப்பது நல்லது.

முக்கிய வீரர்கள்
இந்தியா அணியில் முக்கிய வீரர்களின் எதிர்காலம் குறித்து அணியின் தேர்வாளர்கள் முடிவு எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடுத்த தலைமுறையைத் தயார் செய்யும் பணிகளில் நாம் இறங்க வேண்டும். இளம் வீரர்களை கொண்ட அணி தோற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் அனுபவத்தைப் பெறுவார்கள்.

ஒரே வழி
ஆனால் இப்போது அணியில் பல முக்கிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர் அவர்கள் மோசமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினால், இப்படி தான் கடும் விமர்சனங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். பிசிசிஐ இதில் தலையிட்டு அணிக்குள் இளைஞர்களை அதிகம் கொண்டு வருவது குறித்துச் சிந்திக்க வேண்டும்" என்றார். ஏற்கனவே, அணியில் விராட் கோலிக்கு ஆதரவாகவும் எதிராகவும் 2 குழுக்கள் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கபில் தேவ்வின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்திய அணி இன்றைய போட்டியில் ஆப்கானை எதிர்கொள்கிறது
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications