அஸ்வின் செய்த அந்த தப்பு.. கேகேஆர் பைனலுக்குள் சென்றது எப்படி.. கவாஸ்கர் ஆதங்கம்
துபாய்: அஸ்வின் தவறாக கணித்து விட்டதால்தான் கேகேஆர் ஐபிஎல் பைனலுக்குள் செல்ல முடிந்தது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சார்ஜாவில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-2 சுற்று போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த டெல்லி 135 ரன்கள் மட்டுமே அடித்ததால், எளிதாக கொல்கத்தா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா பேட்டிங் கடைசி நேரத்தில் சீட்டுக் கட்டுப் போல சரிந்தது.

திடீர் சரிவுகள்
இதனால் 19 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 129 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், சகிப் அல் ஹசன் மற்றும் அடுத்த பந்திலேயே நரைன் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். இதனால் டெல்லி வெற்றி பெறும் அளவுக்கு நிலைமை சென்றது. ஆட்டம் பரபரப்பாக மாறியது.

சிக்சர்
நரைன் கேட்ச் கொடுத்து அவுட்டாகியிருந்தார். எனவே ஏற்கனவே மறுமுனையில் நின்ற ராகுல் திரிபாதி ஸ்ட்ரைக்கர் என்ட் பகுதிக்கு ஓடிவிட்டார். எனவே அடுத்த பந்தை அதாவது ஓவரின் 5வது வந்தை திரிபாதி சந்தித்தார். அந்த பந்தில் திரிபாதி சிக்சர் விளாசினார். இதையடுத்து கொல்கத்தா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
Recommended Video

சுனில் கவாஸ்கர் கருத்து
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், அஸ்வின் புத்திசாலித்தனமான பவுலர். எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த இடத்தில் பந்தை வீச வேண்டும் என்பது அவருக்கு தெரியும். பேட்ஸ்மேன் என்ன நினைப்பார் என்பதை அஸ்வின் நன்கு தெரிந்து வைத்திருப்பார். சுனில் நரைன் பிட்சை விட்டு இறங்கி வருவார் என்று நினைத்துதான் அஸ்வின் பந்து வீசினார். அதே போல நரைன் இறங்கி வந்து அடித்ததால் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஷாட் பால்
திரிபாதியும் பிட்சை விட்டு இறங்கி வந்து, இறங்கி அடிப்பார் என்று நினைத்து அஸ்வின் பிளாட்டாக பந்தை ஷாட் பிட்ச் பந்தாக வீசினார். ஆனால் திரிபாதி நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தார். எனவே அவருக்கு பந்தை கணிக்க நன்கு நேரம் கிடைத்தது. சிக்சர் அடித்து விட்டார். திரிபாதிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

ஸ்ரீகாந்த் கருத்து
இதனிடையே, கமெண்டரியில் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த், அஸ்வின் வழக்கம்போல பந்து வீசியிருக்க வேண்டும். வேகமாக பந்து வீசுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே கமெண்ட் செய்து கொண்டிருந்தார். பந்தை பிளாட்டாக வேகமாக வீசி வந்தார் அஸ்வின். இதனால் பந்து ஸ்பின் ஆகவில்லை. இவ்வாறு செய்வது அஸ்வின் பந்து வீச்சுக்கு பலன் தராது என்று ஸ்ரீகாந்த் திரும்ப திரும்ப கூறி வந்தார். அதேநேரம், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஸ்வின் தொடர்ந்து சிறப்பாகவே பந்து வீசியுள்ளார். ஐபிஎல் தொடரில் 51 முறை இடது கை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். ஆனால் வெங்கடேச ஐயர், இடது கை பேட்ஸ்மேன் என்ற போதிலும், அஸ்வினை சிறப்பாக எதிர்கொண்டார். ஆனால் பிந்தைய ஓவர்களில் அஸ்வின் சற்று சுதாரித்துக் கொண்டு வெங்கடேச ஐயரை கட்டுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications